பெரியோரே

வெள்ளை யுள்ளப் பிள்ளைக்கு
வேண்டா மிந்த விளையாட்டு,
பள்ளம் மேடு தெரியாத
பருவ மிதிலே பிள்ளைக்குக்
கள்ளம் கபடம் தெரியாமல்
கவன மாக வளர்த்தேதான்
உள்ளம் உயர வைப்பீரே
உறவா யுள்ள பெரியோரே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Feb-17, 6:47 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 57

மேலே