என் நெஞ்சில் வளர்த்த ரோஜா

உன்னையே நினைக்கிறேன் நித்தம்
உனக்காகவே வாழ்கிறேன்
உன்னை நான் மறந்தால் என்னையே நான் வெறுப்பேன்...

நீ என்னோடு இருந்தால் அது
எனக்கு வசந்தகாலம்
நீ என் கைப்பற்றி நடந்தால் அது
எனக்கு விழாக்கோலம்
நீ என்னைவிட்டு விலகினால்
அன்றே எனக்கு இறுதி ஊர்வலம்...

காலையில் உதித்து மாலையில்
மறையும் சூரியன் அல்ல நம்காதல்
புறகண்களுக்கு தெரியாமல்
உணர்ந்து அறியக்கூடிய எங்கும்
நிறைந்த காற்றுப்போல் நம் காதல்...

வானத்தில் நீலம் போல்
கடலில் அலைபோல்
பாலில் வெண்மைப்போல்
தேனில் சுவைப்போல்
நம் இரு உள்ளங்களும்
ஒன்றாக இணைந்து
உதித்த காதல் இது...

வாழ்ந்தால் உன்னோடு
தாழ்ந்தால் உன்னோடு
வீழ்ந்தாலும் உன்னோடு
நீ இருக்கும்வரை என் உயிரும் உன்னோடு
நீ இல்லையேல் என் உடல் மண்ணோடு...

எழுதியவர் : செல்வமுத்து.M (4-Feb-17, 5:32 am)
பார்வை : 314

மேலே