உண்மை
பிரிவினால்தானே பிரியத்தின் மொழியைப் பேச முடியும் !
இவ்வளவு பேருக்கு ஜெயலலிதாவைப் பிடிக்கும் என்பதே ஆச்சரியம்தான்.யோசித்துப் பார்த்தால், ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே ரொம்பவும் ஆதங்கப்படுகின்றனர்.
நேற்று வரை திமிர் என்று சொன்னவன் இன்று மிடுக்கு என்கிறான். அகம்பாவம் என்றவன் இன்று போர்க்குணம் என்கிறான்.
அவரது ஆணவம் கம்பீரமாகப் பார்க்கப்படுகிறது.
‛இரும்பு மனுஷி’ என பெருமையாக சொல்கிறார்கள்.
இத்தனை நாள் ”இவ்வளவு திமிரா” என கோவப்பட்டவர்கள் எல்லாம், இனிமேல் இப்படியொரு பெண்ணை பார்க்க முடியுமா என ஏங்குகிறார்கள்.
ஆணவக்காரி’ என திட்டிய பெண்கள் கூட, இன்று இமயம் சரிந்து விட்டதாகவே உணர்கின்றனர். ,
‛அவங்க என்னுடைய ரோல் மாடல்டா.
என உள்ளூர பெருமை கொண்டிருந்த பெண்கள்,
இந்த மரணத்தை பெண்மையின் மரணமாகப் பார்க்கின்றனர்.
மொத்தத்தில் எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால்
ஜெயலலிதாவைப் பிடித்திருந்ததுதான் உண்மை !!!