தினம் தினம் காதலர் தினம்

அலையாய் எழுந்த காதலை சொல்ல
காதலர் தினம்வரை காத்திருக்க வேண்டுமா?
ஆசை அன்பினை பரிமாற
அன்றொரு நாள் மட்டும் போதுமா?
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல்
வாழ்ந்திட முடியுமா?
நினைத்த வாழ்க்கை கிடைக்காவிட்டால்
செத்துதான் போகணுமா?
மனதிற்கு பிடித்த ஒருவர் மீது
அன்பு கொள்வது பாவமா?
அதை ஏற்பதும் மறுப்பதும்
அவரவர் விருப்பம்தானே ...
கருத்தொத்துப் போனால்
நெஞ்சில் காதல் வளரும்தானே...
சரியோ தவறோ...
மனம்விட்டு சொல்லிடு...
சந்தேகம் எழுந்தால்
அதை உடனே சரி செய்திடு...
அதுதான் மனதிற்கு நிம்மதி....
இதுவே இன்றை இளமைக்கு
நான் சொல்லும் சேதி....
ஆணும் பெண்ணும்
வாழ்வில் சரிபாதி...

எழுதியவர் : கிச்சாபாரதி (6-Feb-17, 10:20 pm)
பார்வை : 252

மேலே