காதல் வண்ணம்

என்னைச் சுற்றியே உலவும் நிலவே
எப்பொழுதும் உன்னுடைய நினைவே
அன்பே...உனக்கும் உண்டா இந்த நிலை...?
சிறகின்றி வானில் பறந்து பறவையாவதும்
கண்களால் காதல் கதை பேசுவதும்
மொழியறியாது கவிதை வரைவதும்
விழித்திருக்கும் போது கனவு காண்பதும்
இளமையில் மட்டும்தான் நிகழுமா?
எல்லோராலும் நம் போன்று வாழ முடியுமா?
எது எப்படியோ?
காதல் வண்ணம்
நிறைந்தாலும் நெஞ்சில்..
வேண்டுமே உன் அன்பு
எனக்கு இன்னும்....!