என்னை மறக்க நினைக்கிறாயா 555
 
            	    
                அழகே...
என் உள்ளம் 
நோகும்போதெல்லாம்...
எனக்கு ஆறுதல் சொன்ன 
உன் உதடுகள்... 
இன்று ஏனடி இத்தனை 
அலட்சியமாய்... 
இமைமூடாத இரவுகளில் நான் 
தவிக்கின்ற தவிப்பு உனக்கு தெரியுமா... 
என் உணர்வுகளின் ஏக்கங்களை 
நீ உணராதது ஏனடி... 
கோடைகாலத்து மலர்களும் 
மெல்ல விழும்  தூறலும்... 
தொலைவில் ஒலிக்கும் ஒற்றை 
குயிலின் ஓசையும்... 
என்னை உனக்கு 
நினைவூட்டலையா... 
அதிகாலை நீ எழும் நேரம் என் 
கைபேசி ஒலிக்கவில்லையடி... 
எல்லாம் நீ 
மறந்தாயா...
நினைவிருந்தும் என்னை 
மறக்க நினைக்கிறாயா...
என் எதிரில் வந்து 
சொல்லடி கண்ணே...
உன் நினைவுகளைவிட்டு 
நான் மீண்டுவர...
இனியாவது முடிந்தால்
முயற்சி செய்கிறேன்.....
	    
                
