நீ மதுவா விஷமா

...................நீ மதுவா விஷமா..............

ஓர விழிப்பார்வையிலே ஓராயிரம் மொழிகள் சொல்கிறாயடி..
காந்தக் கண்களால் கவர்ந்து என் கனவுகளைக் களவாடிச் செல்கிறாயடி...!

உன் உதட்டோரச் சிரிப்பினிலே உருக்குலைந்து போனேனடி..
கன்னக்குழியின் மெத்தைக்குள் என் முத்தங்கள் நானும் பொத்தி வைத்தேனடி...!

காதோரக் கூந்தலில் கவிகளைக் கிறுக்கி வைத்தவன்...
உன் சேலை முந்தானையில் என் மூச்சுக்காற்றினையும் முடிந்து வைத்தேனடி..!

மையல் பார்வைகளால் போதையேத்திச் செல்கிறாயடி..
மௌனமாய் நீ இருந்தே உனக்காய்த் துடிக்கும் என் இதயத்தை விஷம் ஏத்தியே கொல்கிறாயடி...!

பதில் சொல்லாமல் நின்றென்னைக் கொல்பவளே
இறக்கை இல்லாமல் விண்ணில் பறந்திடச் செய்பவளே...
நீ மதுவா விஷமா....??

-உதயசகி-
யாழ்ப்பாணம்

எழுதியவர் : அன்புடன் சகி (8-Feb-17, 8:47 pm)
பார்வை : 470

மேலே