எதைத்தேடி அலைந்திருந்தேன்

பனியில் கட்டுண்டு கதிர்வீசும் பரிதி
மரத்தின் கிளையினில் இசைத்திடும் குயில்
பூண்டுகள் இடையில் கீச்சிடும் வண்டு
காற்றினில் கலந்து கத்திடும் பறவை

இவையாவும் காலையில் எனைமகிழ்விக்க
இசைப்பாடி இன்பமுடன் திரிகையில் நானோ
எதைத்தேடி எங்கெங்கோ அலைந்திருந்தேன்?
அவைகளின் இசையைக் கேட்காமல் தவிர்த்திருந்தேன்.

நாளையும் வருவார்கள் எனைத்தாலாட்ட
நானும் திருந்துவேனோ? நற்காலையில்
இயற்கையை கண்டுமகிழ மறந்துவிட்டு
தவிர்த்திடும் கயல்களின் நினைவில் திரிவேனோ?

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (10-Feb-17, 5:41 pm)
பார்வை : 396

மேலே