ஓடிப்போனவள்

வேலி என்பது சோழர் காலத்தில் நில அளவைக்குப் பாவிக்கப்பட்ட வார்த்தையாகும். யாழ்ப்பாண குடா நாட்டில் சங்குவேலி, நீர்வேலி. திருநெல்வேலி என்று வேலியில் முடிவடையும் கிராமங்களில் பிரசித்தம் பெற்ற ஊர் அச்சுவேலி. அச்சன்வேலி அச்சு வேலியாக மருவி இருக்கலாம். அத்திமரம் அதிகம் காணப்பட்ட ஊர் ஆகையால்இடப்பெயர் வந்திருக்கலாம் என்பதும் பல இடப்பெயர் ஆய்வாளர்கள் கருத்து. யாழ். குடாநாட்டில் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் என்ற மூன்று பெரும் பிரிவுகளுக்கும் ' அச்சுப்போல் மைய இடத்தில் அமைந்துள்ள கிராமமாகையால் அச்சுவேலி என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது இன்னொரு சாராரின் விளக்கம் உண்டு அச்சுவேலி கிராமத்துக்கு அருகே இடைக்காடு, வளலாய், பத்துமேனி ஆகிய கிராமங்களாலும் சூழப்பட்டது. அச்சு என்பது போரத்துகேய சொல். ஆதனால் அக்கிராமத்தில் போரத்துக்கேயர் ஆட்சியின் போது கத்தோலிக்க மதம் செழித்து இருந்ததற்கு ஆதாரம் இன்றுமுண்டு.

அச்சுவேலிப் பகுதியில் அமைந்துள்ள மூன்று கத்தோலிக்க தேவாலயங்களில் இரண்டாவது பெரிய தேவாலயமாக விளங்குவது அச்சுவேலி வடக்கு புனித அந்தோனியார் ஆலயம், இந்த ஆலயம் அச்சுவேலி பஸ் நிலையத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் 750 மீற்றர் தூரத்தில் வீதிக்கு வடக்குப் புறத்தில் கம்பீரமாக றோமன் கத்தோலிக்க கட்டிடக் கலை அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

புனித சூசையப்பர் ஆலயம், நவக்கிரி அன்னம்மாள் ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம் என்பன அமைந்துள்ளன இக்கிராமத்தில் போர்த்துக்கேயர் ஆட்சி காலத்தில் மதமாறற்ம நடந்ததுக்கு ஆதாரமுண்டு.. இலங்கைக்கு 1505இல் போர்த்துக்கேயரின் வருகை, 1618இல் ஒல்லாந்தரின் வருகை என்பனவற்றை அடுத்தே றோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயங்களின் வியாபகமும் அந்தச் சமயங்கள் சார் நிலையில் ஆலயங்களும் அமைக்கப்பட்டுக் குறித்த காலகட்ட ஆட்சியாளர்களின் தனித்துவமான செல்வாக்கோடு சுதேசிகள் மத்தியில் பரப்பப்பட்டன. அதற்கு முந்திய காலப்பகுதியில் வடபகுதியில் பெருமளவில் இந்து மதமும், குறிப்பிட்ட நகரக் குடியிருப்புக்களை அண்டிய நிலையில் இஸ்லாம் மதமும் வழிபாட்டுக்குரியனவாக இருந்து வந்தன.

அச்சுவேலிப் பகுதியில் முதன்முதலாக 1800ஆம் ஆண்டுக்குப் பின்னர் றோமன் கத்தோலிக்க சமயம் அச்சுவேலி மேற்கில் சிற்றம்பலமுதலியரின் மகள் திருமதி மரியம்செட்டியார் காக்கைப்பிள்ளை (டொன்மரியா) குடும்பத்தினர் சார்நிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்தவகையில் புனித சூசையப்பர் ஆலயமும் அச்சுவேலி மேற்கில் (அச்சுநகர்) நிறுவப்பட்டது. 1995ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்கு முன்னர் அச்சுவேலிப் பங்கில் 400 குடும்பங்கள் வரையில் கத்தோலிக்க குடும்பங்களாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தன.

ஊர்ப் பெயர் எப்படி வந்ததாக இருப்பினும் சுற்றி வளைக்காமல் நாம் கதைக்கு வருவோம். அச்சுவேலி ஊருக்கு முதற் தடவையாக வருவோருக்கு நிலக் குறியாக “அன்னவாசா” வீடு பாவிக்கப்பட்டது. ;கிரமத்தில் வாழ்ந்த மக்கள் பலர் பிறாடுகளுக்கு புலம் பெயர்ரந்தவர்களின் உழைப்பால் செல்வம் கொழிக்கும் ஊராக வளர்ந்து, பல புது வீடுகள் புதிய பாணியில் தோன்றினாலும் அன்னவாசாவின் தோற்றத்தில் மட்டும்; பழமை பிரதிபலித்து, கம்பீரமாக நின்றது. அன்னவாசா சுமார் நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வீடு. குறிப்பாகச் சொல்லப்போனால் 1916 ஆம ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சியின் போது கச்சேரியில் உயரப் பதவியில் இருந்து முதலியார் பட்டம் பெற்ற முதலியார் இமானுவேல் தேவநேசனால் கட்டப்பட்ட வீடு. வீட்டு வாசலில் ஒன்ற இரு தூண்களின் மேல் இரு அன்னங்கள். அதுவே அவ்வீட்டுக்குப் பெயர் வரக்காரணம். அதுவுமில்லாமல் இமானுவேல் அந்த வீட்டை தன் மனைவி மரியாள் அன்னலட்சுமியின் சீதனத்தில் கட்டிய வீடு. மாமனார் அவ்வீட்டுக்குத் தன் மகள் பெயர் நிலைத்து நி;ற்க பெயர் வைக்கவேண்டும் நிரப்பந்தம் செய்ததால் அவ்வீட்டுக்கு அப்பெயரை இமானுவேல் வைக்க வேண்டி வந்து.

இமானுவேல் தேவநேசன் தம்பதிகளுக்கு அநதோனியார தேவாலயத்தோடு நெருங்கிய தொடர்புண்டு. இமானுவேலுக்கு இரு மகள்கள்;. முத்தவள்; பெயர் கிறிஸ்டினா பொன்னம்மா. இரண்டாவது மகள் பெயர் லட்டீசா ஜெயமணி. மூத்தமகள் பிறந்தபின்னரே இமானுவேலுக்கு செல்வம் சேரத்; தொடங்கியது. அதனால் தானோ என்னவோ கத்தோலிக்க இந்து மத பெயர்களை கலந்து மகளுக்கு அந்தப்பெயரைச் சூட்டினார்.

கிரிஸ்டினாவுக்கு அழகுக்குக் குறைவில்லை. தினமும் விதம் விதமான ஆடை அணிவாள். இமானுவேலுக்கு சொந்தத்தில் பச்சை நிறத்தில் ஒஸ்டீன் ஏ40 டெவொன் மொடல் கார இருந்தது, அச்சுவேலியில் சொந்தமாக கார் வைத்திருந்தவர் அவர் ஒருவரே. முதலில் ரிக்ஷோ, அதன்பின் குதிரை வண்டி வைத்திருந்தார். நாளடைவில் பொக்குவரத்துக்கு காரை வாங்கினார். .அவருக்கு கார் ஓட்டத் தெரியாததால் இடைக்காட்டு ஊரைச் சேர்ந்த சொந்தக்காரப் பையன் சுப்பிரமணியன் என்ற இந்து இளைஞனை டிரைவராக வைத்திருநதார். அவனே தினமும் காரில் கிறிஸ்டினாவை கல்லூரிக்கு அழைத்துப் போய்வருவான்.

ஆரம்பத்தில் காரில் போகும் போது சுப்பிரமணியன் தேவையில்லாமல் கிறிஸ்டினாவோடு உரையாடுவதில்லை காரணம் அவள் எஜமானின் அன்பு மகள்; அல்லவா. காருக்கு பின் சீட்டில் இருந்தபடியே அன்று நடக்க விருக்கும் விஞ்ஞான பாடத்துக்கு தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தாள் கிரிஸ்டினா.

“அடக்கடவுளே. ஏன் தலை விதி. இந்த மூன்று நியூட்டனின் விதிகளும் எனக்கு புரியுதில்லையே. டீச்சர் கூட வகுப்பில் சரிவர விளஙகப்
படுத்தவில்லை” கிறிஸ்டினா முணுமுணத்தாள்

அவள் முணுமுணுத்தது கார ஓட்டிக்கொண்டிருந்த சுப்பிரமணியன் காதுகளுக்கு எட்டியது. அவன் சிரித்ததை கிறிஸ்டினா கவனித்துவிட்டாள்.

“ ஏன் சிரிக்கிறாய் சுப்பிரமணி“? கிறிஸ்டினா கேட்டாள்.;.

“ ஏன் தங்கச்சி. இண்டைக்கு பிசிக்ஸ் பாடத்தில் உங்களுக்கு டெஸ்டா?

“ ஓம். அது எப்படி உனக்குத் தெரியும்”?

“ அதில்லை, நியூட்டன் விதிகளைப் பற்றி சொன்னீர்கள் அதுதான்”

“ ஏன் உனக்கு அந்த விதிகளைப் பற்றி தெரியுமா”?

“ ஏன் தெரியாமல்?. பொளதிக பாடத்தில், வகுப்பில் அதிக மாரக்ஸ் நான் வாங்கினவனாச்சே”

“ அப்படியாh? அதுசரி எது வரை படித்திருக்கிறாய்.“?

“ஏ லெவல் வரை”.

“ அது எனக்கு nதியாதே. அப்ப ஏன் மேலும் படிக்கவில்லை”?

“ தந்தையார் இறந்த பின் என் தாயாருக்கு என்னைப் படிப்பிக்க பணவசதியில்லை. அப்பா இரண்டு வருஷத்துக்கு முனபேட இறந்துட்டார். அம்மா வீடுகளில் வேலை செய்து என்னையும் என தங்கச்சியையம் வளர்க்கிறாள். முதலிலை கார் கராஜ் ஒன்றில் மெக்கானிக்காக வேலை செய்தனான். அவருடைய ஏ40 காரை நான் தான் ரிப்பேயர் சேயது கொடுப்பேன். பிறகு உங்கள் அப்பாவிடம் கார டிரைவராக சம்பளத்துக்கு சேர்ந்தனான்” விபரம்; சொன்னான் சுப்பிரமணி

“ உனக்கு நீயூட்டன் விதிகள் பற்றி நலலாக தெரியுமென்றால் அந்த விதிகளோடு சம்பந்தப்பட்ட இந்த பொளதிக கணக்கை எனக்கு உன்னால் விளக்கப் படுத்த முடியமா? இந்தக் கணக்கு டெஸ்டுக்கு வரும் எண்டு நினைக்கிறன.”

“ கணக்கை நான் பார்த்தால் விளங்கப்படுத்த முடியும். “

“ அப்ப காரை ஓரமாகக் கோயில் மடத்தடியிலை நிறுத்தி இக்கணக்கை விளங்கப்படுத்து” கிறிஸ்டினா சுப்பிரமணியிடம் வேண்டினாள்;.;

சுப்பிரமணியனுக்கு கிறிஸ்ரினா கேட்டது ஒரு சவாலாக அமைந்தது.

“ அதுக்கென்ன தங்கச்சி” என்று கூறியவாறே காரை கோவில் மடத்தடியில் நிறுத்தினான். கிறிஸ்;ரினா கொடுத்த பௌதிக கணக்கைப் பார்த்ததும் அவனுக்கு வினாவுக்குப் பதில் தெரிந்து விட்டது. உடனே கணக்கு;ற்கான விடையை தெளிவாக கிறிஸ்ரினா விளங்கப்படுத்தினான். கிறிஸ்;ரினா சுப்பிரமணிக்கு அவ்வளவுக்கு விஞ்ஞான அறிவு இருக்குமேன ஏதிர்பார்த்திருக்க வில்லை.

பௌதிக கணக்கில் ஆரம்பித்த அவர்களிடேயேலான தொடர்பு கல்லூரிக்குப் போகும் வழியில் தினமும் சில நிமிடங்கள் கோவில் மடத்தடியில் விஞ்ஞான பாடங்களில் உள்ள சந்தேகங்களை நிவிர்த்தி செய்யும் சந்தர்ப்பமாக அமைந்தது. காலப்; போக்கில் மடத்தடி டியூசன் படிப்படியாகச் சிரித்து பேசித் தொட்டு உரையாடும் அளவுக்கு அவர்களிடையே காதலாக மலர்ந்தது.

நாளடைவில் கிறிஸ்ரினா வகுப்பில் அதிக புள்ளிகள் எடுக்கத்; தொடங்கினாள். விஞ்ஞான பாடம் படிப்பிக்கும் டீச்சருக்கு ஒரே ஆச்சரியம்.

“ என்ன கிறிஸ்றினா முன்பு ஐம்பதுக்குக் குறைவாக மார்கஸ எடுத்த நீ இப்போ எண்பது மேலே எடுக்கிறாயே அது எப்படி? டீச்சர் கேட்டாள்.

“ எனக்குத் தெரிந்த ஆண்டி ஒருத்தி டியூசன் சொல்லி தருகிறா” என்று சொல்லி மலுப்பிவிட்டாள்.

கோவில் மடத்தடியில் கிறிஸ்ரினாவும் சுப்பிரமணியனும் அடிக்கடி சந்தித்து பேசுவதைக் கோயில் ஐயர் சிவசர்மா கண்டுவிட்டார். அவருக்கு இரு குடும்பங்களையும் தெரியும். இமானுவேல ஒரு திவீர கத்தோலிக்கர் என்பதை அவர் அறிவார்.

பிரச்சனை பெரிதாக முன் ஒரு நாள் அவர் சுப்பிரமணியனை அழைத்து
“இங்கைபார் சுப்பிரமணி நீ இமானுவேல்; முதலியாரிடம் டிரைவராக வேலை செய்வது எனக்குத் தெரியும். அவர் ஒரு தீவர கத்தோலிக்கர். நீயோ ஒரு இந்து மதத்தவன்;. நீயும் முதலியாரின் மகளும் சிரித்துப் பேசி பழகுவது எனக்குச் சரியாக படயில்லை. அதனாலை வீண் வில்லங்கம் தான் வரும். உங்களிடையே இந்தக் காதல் தொடர்ந்தால் முதலியாருக்கு நான் உங்கள் காதலைப் பற்றி முறையிட வேண்டிவரும். அதனாலை வரும் விளைவை உனக்குத் தெரியும் தானே. ஊரிலை மதக் கலவரம் கூடத் தோன்றலாம்”என்று எச்சரிக்கை செய்தார்; ஐயர்.

ஐயரின் அந்த எச்சரிக்கையால் அவர் சந்தித்து பேசும் இ;டம் மடத்தடியில்; இருந்து குளத்தடியில் உள்ள ஆலமரத்தடிக்கு மர்றியதே தவிரக் காதல் தொடர்ந்தது.

ஒரு நாள் வெகு நேரமாகியும் கிறிஸ்ரினா வீடு திரும்பவில்லை. அன்னம்மா கணவனுக்கு முறையிட்டாள்

“ என்னங்க பள்ளிக் கூடம் மூன்று மணிக்கு முடிந்து விடும். மூன்றரைக்குள் வீடு வந்து விடவுhய். இப்ப நேரம் ஐந்தரை. சுப்பிரமணி கிறிஸ்ரினாவை இன்னும் ஸ்கூலாலை கூட்டி வரவில்லை. இவர்களுக்கு என்ன நடந்தது என்று யாரையாவது ஸ்கூலுக்கு அனுப்பி கிரிஸ்ரினாவுக்கு என்ன நடந்தது என்று கேளுங்;கோவன்” பதட்டத்தோடு அன்னம்மா கணவனிடம் முறையிட்டாள்.

கிறிஸ்ரினாவை தேடி இமானுவேல் ஸ்கூலுக்குப் புறப்படும்; போது கிறிஸ்ரினாவின் சினேகிதி வத்சலா ஒரு கடிதத்தை கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாள்.

“ வத்சலா யார் கொடுத்த கடிதம்”? இமானுவல் கேட்டார்.

“ உங்கள் மகள் கிறிஸ்ரினா தான் இந்தக் கடிதத்தை உங்களிடம் கொடுக்கச் சொல்லி என்னிடம் தந்தவ” எனறு வத்சலா பதில் சொல்லிவிட்டு அவ்விடத்தில் நின்றால் பிரச்சனை எனக் கருதி நிற்காமல் போய்விட்டாள்.

இமானுவேல் கடிதத்தை கவரில இருந்து எடுத்து வாசித்தார்.

“ அன்பான அப்பா, அம்மா சகோதரிக்கு.
என்னை நீங்கள் இனி தேட வேண்டாம். நான் சுப்பிரமணியோடு கொழும்புக்குப் போய் எங்களுக்கு என வாழ்க்கையை அமைத்து வாழப்போகிறோம். நூன சுப்பிரமணியை கன காலம் காதலிக்கிறேன். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்ற படியால் எங்கள் காதலை நீங்கள் ஏற்கமாட்டீர்கள். கார் கொடிகாமம் ஸ்டேசனில் நிற்கிறது. சாவியை ஸ்டேசனுக்கு முன்னால் உள்ள முருகன் கபே முதலாளியிடம் கொடுத்திருக்கிறோம் வாங்கிக கொள்ளுஙகள். ஏங்களுககுக தெரியும் நாங்கள் இருவரும் வௌ;வேறு மதமாகையால் அச்சுவேலி கத்தோலிக்க மக்கள் நானும் சுப்பிரமணியம் கணவன் மனைவியாக வாழ ஏற்கமாட்டார்கள். அப்பா எங்கள் செலவுக்க அலுமாரியில் இருந்து கொஞ்ச பணம் எடுத்துச் செல்கிறேன். அவர் வேலை எடுத்ததும் அந்தப் பணத்தை உங்களுக்கு அனப்புவார்.

இப்படிக்கு
கிறிஸ்ரினா – சுப்பிரமணியன்

கடிதத்தை வாசித்ததும் அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக்கோண்டு இமானுவல் கதிரையில் அமர்ந்தார். அவர் கையில் இருந்து கீழே விழுந்த கடிதத்தை எடுத்து வாசித்து அன்னம்மாள் ஓ வென்று அழுதாள்.

“படு பாவி. செல்லம் கொடுத்து வளர்த்தியளே மோசம் செய்து போட்டு ஓடிப்Nhயிட்டாளே. எஙகடை மனம் நோக வைத்துப் போட்டு நல்லாய் உவள் வாழமாட்டாள்” என்று திட்டத் தொடங்கினாள் அன்னம்மா. இனத்தவர்கள் கூடி நடந்ததை விசாரித்து எரிகிற நெருப்பிலை எண்ணெய்யை வார்த்தது போல் பேசத் தொடங்கினார்கள். அநத கூட்டத்தில் ஒருத்தி பொலீசுக்கு போய் முறையிடும் படி ஆலோசனை சொன்னாள்
“ முறையிட்டால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. இருவரும் மைனர்கள் இல்லை என்று பொலீஸ் சொல்லிப்போடும” என்றார் இமானுவேல. வீட்டு ஹாலில் தொங்கிக் கொண்டிருந்த இருந்த கிறிஸ்ரினாவின் படம் இருந்த இடம் nதிரியாமல் மறைந்தது.

“ இனி எப்படி இமானுவேல் ஊரிலை கத்தோலிக்க மக்களிடையே மரியாதையோடு வாழ முடியுமா?. இனி எப்படி இவள் லட்டீசியாவுக்கு கலியாணம் பேசமுடியும்?. அக்கா டிரைவரோடை ஓடிப்போனவள் என்ற கெட்ட பெயர் இவள் திருமணத்துக்கு தடையாக இருக்குமே”இ அன்னலட்சுமி கண்ணீர் விட்டு கவலைப் பட்டாள்.
*******

வருடங்கள் ஐந்து உருண்டோடின. இமானுவேலின் செல்வம் குறையத் தொடங்கியது. வயல் காணியையும், காரையும் விற்றார். பயத்தில் லட்டீசாவை மேலே படிக்க விடவில்லை. சில்லாலை, இளவாலை போன்ற கத்தோலிக்கு ஊர்களில் இருந்து லட்டீசாவுக்கு பேசி வந்த திருமணங்கள் தமக்கை ஒரு இந்து மத டிரைவரோடு ஓடிப்போனவள் என்று கேள்விபட்டு
தடைப்பட்டன. தனக்குத் திருமணம் வெண்டாம். தான் கன்னியாஸ்திரீயாக போகப் போரன் என்று பெற்றோரை வற்புறுத்தினாள் லட்டீசா. ஆந்த நேரம்; அந்தோனியார் கோவில் பாதிரியாரின் தூரத்து உறவுப்யைனான சூசைப்பிள்ளை லட்டீசாவை மணமுடிக் பாதிipயார் மூலம் விருப்பம் தெரிவித்தான்.
ஒரு நாள் ஜோசப் பாதிரியார் இமானுவேலை சேர்ச்சுக்கு அழைத்து
“ இமானுவேல் உன் மகளுக்கு அந்தோனியார் வழிகாட்டி விட்டார். எனது தாரத்து சொந்தக்காரப் பையனான சூசைப்பிள்;ளை நல்ல பிள்ளை. துபாயிலை மெக்கானிக்காக வேலை செய்கிறான் அவனுக்கு கிறிஸரினாவையும் சுப்பிரமணிக்கு காதல் பற்று தெரியும்;;. ஆவர்கள் தான் அவனுக்கு தூயிலை மெக்கானிக வேலை எடுத்துக் கொடுத்து நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறான்” என்றார் ஜோசப் பாதிரியார்.

“ என்ன பாதர் சொல்லுறியள். லட்டீசீயாவுக்கு மாப்பிள்னை தானவே கேட்டு உங்களிடம் வந்து சொன்னான் என்கிறியளா”?

“ ஓம். சுப்பிரமணி தனக்குச் செய்த பெரிய உதவிக்கு இது பிரதி உபகாரமாக தான் செய்ய வேண்டும் என்கிறான் சூசைப்பிள்ளை”

“அப்ப கிறிஸரினா துபாயிலையா இருக்கிறாள்.”?

“ ஓம் ஒரு டிரான்ஸபோர்ட் கம்பனியில் சுப்பிரமணி மனேஜராக இருக்கிறான்.
வடமராட்சியில் இருந்து மத வேற்றுமை பாராமல் பத்து பேருக்கு துபாயிலை தன் கொம்பனியிலை டிரைவர் வேலை எடுத்து கொடுத்திருக்கிறான்”

“ அப்ப கிறிஸ்ரினா”?

“அவளும் துபாயிலை ஸ்கூல் ஒன்றில் டீச்சராக வேலை செய்கிறாள். சுப்பிரமணி தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் என்று சூசைபிள்ளை எனக்கு சொன்னான். நீர் என்ன சொல்லுகிறீர்.? லட்டீசாவை சூசைப்பிள்ளைக்கு திருமணம்; செய்து வைக்க உமக்கும் அன்னலட்சுமிக்கும் சம்மதமா? சீதனம் ஒன்றும் கொடுக்கத் தேவையில்லை. ஆனால்…”.

“ ஆனால் என்ன பாதர்”?

“ திருமணம் முடிந்த பிறகு துபாயுக்கு லட்டீசாவை, சூசைப்பிள்ளை கூட்டிக் கொண்டு போய் விடுவான். சம்மதம் தானே“?, பாதர் இமானுவலைக் கேட்டார்.

சற்று, வினாடி மூக்கில் கை வைத்து யோசித்து விட்டு “ இந்தத் திருமணத்துக்கு எனக்கும் அன்னம்மாவுக்கும் பூரண சம்மதம் பாதர். இந்த சேரச்சிலை திருமணம் உங்கள் ஆசியோடு நடக்க வேண்டும்” என்றார் இமானுவேல்;

சேர்ச்சில் இருந்து வீடு திரும்பிய இமானுவேல் செய்த முதற் காரியம் ஸடோர் ரூமுக்குள் தூசி படர்ந்து கிடந்த கிறிஸ்ரினாவின் படத்தைத் தூசி தட்டி ஹால் சுவரில் மாட்டியது.

*******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் கனடா ) (11-Feb-17, 7:24 am)
Tanglish : odiponaval
பார்வை : 681

மேலே