ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு...
ஏறுதழுவுதலை கூறுபோட நீ யார்?
தாறுமாறாய் பண்பாட்டை பேசாதே
வீறுகொண்டு விழித்தெழுந்தால்
சாறு பிழிந்த நாளங்கள் காண்பாய்

சாதுவாய் சஞ்சரிப்பதால்
சரித்திரம் உடைக்க எண்ணாதே
மிரண்டால் மீட்சி காணாய்
வரட்சி சுரந்து வழியக் காண்பாய்

காளை வீரங்கண்டறியா
கோழையே- சீண்டிப் பார்க்காதே
கீழைக் குணம்விரட்டு அல்லேல்
நாளைய உதயம் நரகந்தொடும்

மனதை கொன்று கூடவே
மனிதமும் கொன்றவர்களே
வதை என்று வர்ணிக்காதே
சிதையிட்டு ஊண் உண்பவனே- நீ
கதை பேசுகின்றாயா
பதைபதைத்து மிரளோம்
உதை கொடுத்து காப்போம்

குதிரை ஓட்டமொரு குற்றமில்லை- உயிர்
குடித்து ஊண் தின்னலும் குற்றமில்லை
மண்பேணும் காளைவீரம்
விண் எட்டல்வதையாம்..

மரபு காத்துநிற்க
மடியவும் அஞ்சோம் உனை
மாய்க்கவும் தயங்கோம்
மாவீரங்கொண்ட தமிழர் நாம்...
$by: S.Jeya

எழுதியவர் : S.Jeyarani (11-Feb-17, 10:20 am)
பார்வை : 217

மேலே