களம் காண் தோழா - துகிருஷ்ணமூர்த்தி

தங்கம் வைரம் தவிர்த்து நின்றோம்.
எளிமை வளமை ஒதுக்கி சென்றோம்.
சிங்கம் புரட்சி சங்கத்தமிழ் என்றே .
குப்பை கழிவை கொண்டாடி நின்றோம்.
கோலோச்சவும் வகை செய்தோம் -அன்றே
மட்டைகளாய் மாறி நின்றோம் -மர
மண்டைகளாய் மாற்றப்பட்டோம்.
துஞ்சித்து வாழ வைத்தே -நாம்
வஞ்சித்தும் வீழ்த்தப்பட்டோம்.
வீறு கொண்டு எழுந்திடவே-இன்று
வேளை ஒன்று வாய்த்ததுவே!
வேலை நன்று புரிந்திடவே,
நல்லிளைஞர் நாடி நின்றோம்.
சல்லிக்கட்டை காத்ததுபோல்
சீறி வா என் இனத் தோழர்காள்!
மாறி விரையும் காலத்துடன்,
மாண்பும் மரபும் ஆளவும் -மீட்ட
பண்பும் மேலிடவும் - பலமான
பாரதமும், வளமான தமிழகமும்
மாரதம் ஏற களம் காண் எம் தோழா!

எழுதியவர் : (12-Feb-17, 7:35 am)
பார்வை : 152

மேலே