படைத்தல்

இறைவன் படைக்கும் தொழிலில்
முதலில் பூமியை படைத்தான்
வண்ணம் சேர்க்க நினைத்து
மலர்களை படைத்தான்
குளுமை வேண்டி
கடல்களை படைத்தான்
கம்பீரம் விரும்பினான்
மலைகளை படைத்தான்
பசுமை விரும்பி
காடுகளை படைத்தான்
பசுமையை காக்க
மழையை படைத்தான்
இத்தனை வளங்களையும்
அனுபவிக்க பல்வேறு
ஜீவராசிகளை படைத்தான்
இருந்தும் அவன் மனம் ஆறவில்லை
எதோ குறை இருப்பதாக எண்ணினான்
ஆம், இத்தனை வளங்களையும்
காக்க வேண்டுமே?
மனிதனை படைத்தான்

எழுதியவர் : ஸ்ரீராம் ஸ்ரீனிவாசன் (10-Jul-11, 4:57 pm)
சேர்த்தது : Sriram Srinivasan
பார்வை : 636

மேலே