அரிவையினுல் அடக்கம் ஐம்பூதங்களும்

கல்கண்டு சிரிப்பில் களம் காணும் வெண்முத்துக்கள் - நீ வாயசைக்க...
புருவம் உயர்த்த புயல் கிளப்பும் வெண்கரு விழித்திரை...
செவியோரம் செங்காற்றில் சந்தம் பாடும் சுருள் கூந்தல்...
கூந்தலிடை தழுவிச்செல்லும் சுவாசக்காற்று, மலர்த்தோட்டத்தை
கடந்த ஒரு களிப்பு, மலர்ந்த மண்மணம் சேர்த்து
மழை பொழிய மதிமயங்கும் - நின்னை நனையச்செய்ய...
கானலுடன் கலந்து வரும் கடல் காற்றும்...
கார்கூந்தல் கடந்து சென்றால் குளிர்காற்று...
உன் கால் பட்ட கல்லணையில் கரைய நினைக்கும் காவிரியும்
கற்பாறையுடன் கழுவேறும்... கள்ளச்சிரி கண்டு...
சாமர்த்திய சந்திரனும் சட்டென்று சலவை செய்யும் - நீ சாமத்தில் சாலை வர...
துயில் எழுப்ப தூது வந்த ஆதவனும்
துள்ளி மறைந்து துருவம் மறந்து துதிபாடும்...
நீ நடக்க நிழல் தாங்கும் நிலவளமும்
நிம்மதியாய் நித்திரையில் நிதம் நெகிழ...
பஞ்ச பூதங்களும் பதம் பணியும் பாவை நின் படைப்பு பகன்று...!


- நா. அருள்சிங், சிவந்திபுரம்


****

எழுதியவர் : நா. அருள்சிங், சிவந்திபுர (12-Feb-17, 8:12 pm)
சேர்த்தது : Arulsingh
பார்வை : 232

மேலே