பஞ்சதந்திரம்

பஞ்சதந்திரம்
☺☺☺☺☺
😊😊😊😊😊
☺☺☺☺☺
😊😊😊😊😊
☺☺☺☺☺
திரு. வைகோ அவர்களின்

பஞ்சதந்திரம்.
☺☺☺☺☺
தேர்தல் நேரத்தில் ஆட்சியைக்

கைபற்ற அரசியல் கட்சிகள்

கூட்டணி கூட்டணி அமைப்பது

1967 முதல் தமிழகத்தில்

தொடர்கிறது.

☺☺☺☺☺

1967 ல் நாடெங்கெங்கும் அசைக்க

முடியாத மிகவும் பலம் வாய்ந்த

அரசியல் கட்சியாக இருந்த

இந்திய தேசிய காங்கிரஸ்

இருந்தது.

☺☺☺☺☺

அதன் பின்னர் பிரதமர் இந்திரா

காந்தி அவர்கள் எடுத்த சில

முடிவுகளால் காங்கிரஸ் கட்சி

இரண்டாகப் பிளவுற்றது.

தற்போது இந்திய அளவில் உள்ள பெரிய எதிர்கட்சி காங்கிரஸ் கட்சி என்றாலும் அதற்கு பாராளுமன்றத்தில் எதிர்கட்சி என்ற தகுதியைப் பெறவில்லை. எண்ணிக்கையின் அடிப்படையில் பல எதிர்கட்சிகளில் காங்கிரஸ் பிரதான கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த நிலையில் இருப்பது அதிமுகதான். எனவே அதிமுகவின் ஆதரவின்றி எந்த மசோதாவிற்கும் சட்ட வடிவம் கொடுக்க முடியாது. தற்போது நாட்டில் இந்திரா காங்கிரஸ் என்றழைக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் தவிர காங்கிரஸ் என்ற பெயரை இணைத்துக்கொண்டு பல காங்கிரஸ் கட்சிகள் தோன்றின. அவற்றில் பெரும்பாலானவை மறைந்துவிட்டன. பல ஆண்டு கழித்து இந்திரா காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து காங்கிரஸ் என்ற பெயரை இணைத்துக் கொண்டு மகாராட்டிராவில் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றாக இருப்பது சரத் பவார் தலைமையில் இயங்கும் தேசியவாத காங்கிரஸ். பவாரின் துணையின்றி அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியாது.

காங்கிரஸ் கட்சி தனது பலத்தை இழந்து நிற்பதற்கு இந்திரி காந்தி அவர்களின் ராஜதந்திரமே காரணம்.
திமுகவில் பொருளாளராக இருந்த திரு. எம்ஜிஆர் அவர்களே மாநாட்டுக் கணக்கை கட்சித் தலைவரிடம் கேட்டமையால் அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இது கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படவேண்டிய விடயம். இன்றும் அவர் துவக்கிய கட்சி ஆட்சியில் இருப்பதற்கு அவரது திரைப்படச் செல்வாக்கும், அவரது திரை உழைப்பிற்கு கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை அடித்து மக்களுக்காக தாராளமாக செலவிட்டார். அவரது ராஜதந்திரம் அவருக்குப் பின்னர் வந்து அவர்துவக்கிய கட்சியை அசுர பலம் வாய்ந்த கட்சியாக மாற்றிய செல்வி. ஜெ. அவர்களின் ராஜதந்திரமே இன்றைய அதிமுகவில் நடைபெறும் உலகமே வியந்து பார்க்கும் உட்கட்சிப் பூசல்.

வைகோவின் அவர்களின் ராஜதந்திரமே நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் வெளியேறி அதிமுக/ இப்போது விகேஎஸ் அணியில் இருப்பதற்கு காரணம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியைத் துவக்கினார். அந்தக் கூட்டணியால் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. தேர்தல் முடிவுக்குப்பின் அவரது அறிவிப்புதான் மேலே உள்ள கருத்துச் சித்திரத்தில். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ஆளுங்கட்சியான அதிமுகவைவிட திமுகவைத்தான் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அவர் தனது கூட்டணியில் இருந்த விசிக, பொதுவுடமை கட்சிகளின் தலைவர் சுளித்து இப்போது சற்று விலகி நிற்கும் அளவுக்கு"என் தந்திரத்தால் தான் திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை" என்று கூறினார். அவரது அறிவிப்பு பற்றி 'தி இந்து' நாளிதழில் வெளியிடப்பட்ட கருத்துச் சித்திரமே நீங்கள் மேலே பார்த்த படம். இது வெளியான நாளை குறித்து வைக்க மறந்துவிட்டேன். இந்தப் படத்தை நகைச் சுவைப் பகுதியில் அரசியல் விமர்சனம் என்ற பிரிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். எனது மேசை மீது இருந்த புத்தகம் ஒன்றில் இன்று இப்படத்தைக் கண்டதின் விளைவே அவசரக் கோலம் அள்ளித் தெளி வகையைச் சேர்ந்த இக்கட்டுரை. அலைபேசியில் அச்சிட்டதால் சொல்லப்படவேண்டிய பல விடயங்களை அச்சிட முடியவில்லை.

☺☺☺☺😊😊

நன்றி ----> படம்: 'தி இந்து'
படத்திற்கான கருத்தை அளித்தவர்::;
சொ. சந்தனக்குமார், சிவகிரி


திரு. ஜி. கே வாசன் அவர்கள் தலைமையில் இயங்கும் கட்சியை துவக்கியவர் அவரது தந்தையார் திரு. மூப்பனார் அவர்கள். வாசன் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்திருக்கலாம். பிரிந்து வந்த அவரது செல்வாக்கு அவரது தந்தையின் செல்வாக்கோடு ஒப்பகட்டுப் பார்க்க முடியாது.

தற்போது அசுர பலம் வாய்ந்த கட்சியாக இருப்பது அதிமுக. அதற்கு அடுத்த நிலையில் திமுக.

திமுக 1967 ல் வெற்றி பெற்றதற்கு மிக முக்கியமான காரணங்கள்:

1. அப்போது நிலவிய கடுமையான பஞ்சம்.

2. திமுகவின் பிரச்சாரம், மற்றும் சினமா கவர்ச்சி.
3. அவர்கள் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க வெளியிட்ட புரட்சிகரமான கொள்கைகள் மற்றும் அறிவிப்புகள்
4. தமிழப் பற்றை அவர்கள் வெளிக்காட்டிய விதம்.

5. இந்தி எதிர்ப்பு போராட்டம். இந்தி திணிக்கப்படுவதை ஏதிர்த்து ஒரு அறிக்கையைக் கூட அன்று ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை.

மக்களைக் கவர்ந்திழுக்கும் பொதுமேடைப் பேச்சாளர்களும் இல்லை.

எழுதியவர் : மலர் (12-Feb-17, 8:59 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 170

மேலே