அன்னையே போற்றி
ஆதியாய் அரவணைக்கும் அன்னையே போற்றி !
ஆண்டிடும் அகிலத்தின் சோதியாய் நிற்பவளே !
ஆண்டவன் அளித்திட்ட பெட்டகம் நீயன்றோ !
ஆறுதலும் தருகின்ற அம்மாவே வாழ்கவாழ்க !
ஆரம்பமும் முடிவுமாகிச் சக்தியின் மறுவடிவே !
ஆனந்தகீதம் பாடுவோம் உன்னையும் வணங்கியே !
ஆடுகின்ற நர்த்தனங்கள் உனையம்மை உனக்காக !
ஆணையிடு எங்களுக்கு அமைதியின் உறைவிடமே !
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்