சந்தித்த வேளை - புதுக்கவிதை

சந்தித்த வேளையில்
சிந்திக்க நான் மறந்து
மயக்கத்தினால்
கண்கள் போதையேற
வீழ்ந்தேனடி ! அறிவாயோ நீ !!!
அந்தநாளின் நினைவுகளில்
அந்தரங்கக் கனவுகள் !


சூடான மேனியாய்
பரவசச் சிலிர்ப்புடன்
மயங்கியப் பார்வையாய்
வார்த்தையை விழுங்கித்
துடித்தச் செவ்விதழ்கள்
கைமெலியாமல் நழுவிய
கண்ணாடி வளையல்கள்
ஆயிரமாயிரம் கதை பேசின !!!


குளிர்வாடை வீசாமல்
நெளிந்த கொடியான இடுப்பில்
பட்டாடைகள் பாரமாகிக் கட்டவிழ
இருமனம் ஓருடலாய்
சேரத்துடித்தப் அப்பொழுதில்
மெய் மறந்தேனடி ! மடி சாய்ந்தேனடி !


வாசலில் உன் வரவைக்கண்டு
வெட்கத்தால் முகந்தாழ்த்திச்
சொல்ல பலயிருந்தும்
சொல்லாமல் புன்சிரிப்பால்
மறைத்தேனடி ! அவையறிந்தும்
உண்மையாவும் நீயறிந்தவளாய்
இருபுருவமதை மேலுயர்த்திச்
சிரித்தாயடி அன்புத்தோழி!



ஆக்கம் ;- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (14-Feb-17, 5:41 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 209

மேலே