கனவில் அன்று

என் எழுத்துக்கள் உன்னை "கவி" பாடியது
என் காகிதங்கள் கூட உன்னை "காதல்" செய்தது
என் இதயம் கூட சற்று வேகமாய் துடித்தது
என் எண்ணங்கள் உன்னை மட்டுமே ஆராதனை செய்தது
என் வீட்டு கடிகாரம் கூட சற்று வேகமாய் சுழன்றது
காலை நேரம்,
ரோட்டோரம் நான்,
பதட்டத்தோடு காத்திருந்தேன்...,
தூரத்தில் என்னவள்,
நீல நிற சேலையில்...,
என்னை நோக்கி வந்துகொண்டிருந்தாள்....,
சட்டென்று ஒரு குரல்,
அன்பும் கண்டிப்பும் சேர்ந்த சத்தத்ததோடு ஒலித்தது...
"டே கண்ணா 8 மணியாச்சி இன்னமுமா தூங்குவ, போய் குளிடா" என்று...,
சட்டென்று கண் விழித்தேன், அது என் அம்மா...,
மெதுவாக புரிந்தது... என் காதல் கனவில் மட்டுமே என்று...
நிஜத்தில்....?
இப்படிக்கு
- சா,திரு -