மலரின் பருவங்கள்

மலரின் பருவங்களை
விளக்கச்சொல்லிக் கேட்டிருந்தேன்.
அவளும் விளக்கினாள்!
புரிந்தும் புரியாதவனாய் விழித்தேன்!
சளைக்காமல் மீண்டும் மீண்டும்
விளக்கிக்கொண்டிருந்தாள் தனது
இதழ்களின் புன்னகையால்...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (16-Feb-17, 7:45 am)
Tanglish : malarin paruvangal
பார்வை : 221

மேலே