நானும் ஒரு துறவி

நானும் ஒரு துறவிதான்..

கடல் கடந்து - காமத்தையடக்கி..
கண்மொழி பேசும் மனைவியை துறந்து..
தனிமையாய்...

நானும் ஒரு துறவிதான்..

தெரியாத முகங்களில்.....
தெரிந்த முகத்தை தேடுகின்றேன்......

அதோ! விரலை சப்பும்
வெள்ளைக்கார குழந்தையில்...

என் மகள் தெரிகின்றாள்.......

என் வாரங்கள்.....வெள்ளிக்கிழமைக்கு...

தவம் கிடக்கின்றன.....!!!

வருச விடுமுறையில்...
ஆசையுடந் என்னூர் அடைவேன்...

என் கற்பிணி பை க் கு- என் உறவினர்களால்...
இலவசமாய் பிரவசம் பார்க்கப்படும்...

வற்றிய பையுடன்....வீடு செல்வேன்....
யாரோ அங்கிள்..என சொல்லியவாரே...

ஓடுகிறாள்..
என் நான்கு வயது தேவதை! ...

என் அன்பு மனைவி...
சிரித்தாள்...பிறகு

குரல் உடைந்து அழுகிறாள்.....

அவளிடமிருந்து கரைவது....கண்ணீர்
மட்டுமல்ல- இளமையும்...

எழுதியவர் : விஜயராணி (17-Feb-17, 4:14 pm)
Tanglish : naanum oru thuravi
பார்வை : 107

மேலே