Vijayarani Charles - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Vijayarani Charles |
இடம் | : |
பிறந்த தேதி | : 06-Apr-1987 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-Feb-2017 |
பார்த்தவர்கள் | : 162 |
புள்ளி | : 20 |
விளை மகள் என்னும் நான் !!!
விளை மகள் என்னும் நான் !!! விலைமகள் ஆகிட்டேனே!!!
என் பச்சை உடை கலையது! - தீ பத்தி வைக்கிறான் பாவி மகன் !!!
விளை நிலத்தை விக்க கூடாது -விவசாய பூமியாம்!
தரிசாய் காமிக்க நரித்தனம் செய்யிறான் ...
கர்ப்பணி வயித்து சிசுவை களைச்சு - மலடாக்குவதா ?? உன் மானிட சட்டம் ???
!! உன் வயிறு எரியாமல் நான் காத்தேன் உன் பண ஆசையினால்
என் உடல் ஐயோ எரியுதே!!!
என்னை அழித்து வில்லா , மாளிகை , கட்டியதில் மிச்சமான
சிமெண்டும் , சுண்ணாம்பும் எடுத்து வச்சிகோ!
பசிச்சா சாப்பிடு ! இல்ல சாமதியாவு!!!!!
நான் உனக்கு சோறு போட்டேன் ! நீ என்னை ஏன் கூ று போட்டே???
முள்ளு
மண்ணை பொன்னாக்கும்!
வித்தகன் நீ!!!!
ஆனால் தண்ணீருக்காய்
யாசிக்கிறாய்!
காணி நிலம் பாரதியின் ஆசை!
நிலத்தை காப்பதே
இன்றளவில் உன் ஆசை!
உன் நிலத்தை தரிசாய் மாற்றிடத் துடிக்கும்
விற்பனையாளர்..... பசித்தால் !!
சுண்ணாம்பு பொங்கலுடன்
சிமெண்ட் குழம்பும், தொட்டுக்கொள்ள செங்கல் சட்னியும்
உண்ணட்டும்!!!
மண்ணின் தரம் காக்கும் நீ
தரங்கெட்ட தரகர்களின் பேராசைக்கு பலியாகவில்லை
என்பதால்தான்
நாங்கள் தரமான உணவை உண்கின்றோம்!
நீ மண்ணின் உன் கனவுகளை விதைத்து!
உழைப்பையே உரமாக்கி! எதிர்காலத்தை அறுவடை செய்கிறாய்!!!
நீ மண்ணை நேசிக்கும் விவசாயி!
கடவுள் பூமிக்கு அனுப்பிய விசுவாசி!!!!
உன்
திக்கி திணறி தமிழ் பேசிய சின்னஞ்சிறு வயதில் நீ உன் அம்மாவால்
காதலிக்கபட்டதுண்டா??
யாரோ அடித்ததாய் கைக்காட்டி!
கைக்கால் உதைத்து அழுத உன்னை கட்டியணைத்து
கண்ணீர் துடைத்த உன் அப்பாவால் நீ!
காதலிக்கபட்டதுண்டா??
உன் அண்ணன் உடைத்த யானை பொம்மையினை நீ உடைத்ததாய் சொல்லி!
முதுகில் வாங்கிய அடியினை கண்டு ஆற்றாமையால் !!!
உன்னைப்பார்க்கும் உன் அண்ணானால்
காதலிக்கபட்டதுண்டா??
இறந்துபோன தாத்தாவின் சாயல் உனக்கு இருப்பதாய் சொல்லும் !!!
பாட்டியின் நடுங்கிய கைகளுக்குள் உன்னை நிறுத்தும்
அப்பாட்டியினால்
காதலிக்கபட்டதுண்டா??
நீ அப்படி காதலிக்கப்பட்டிருப்பின்!! சொல்!!!
என் அநாதை இல்ல நூலகத்
வேப்பமர கிளைகளிலே அழகான கூடு கட்டி!
கரிய இன காக்கையொன்று
முட்டையிட்ட கதையினை
உன்னிடம் சொல்ல நினைத்திரிந்தேன்!!!
என் நீள்கின்ற இரவுகள்..
உனக்கு எழுதிய கவிதைதனை
பத்திரமாய் எடுத்துவைத்தேன்!!!
உனக்கென்னமா?!!
உன் புருசனுக்கு வெளிநாட்டு வேலை!
என தினமும் பொறாமையில் முகம் கழுவி!
அனல் மூச்சில் என்னை கருக்கும்!
பக்கத்து வீட்டின் நிகழ்வுகளை மனதார ஒதுக்கிவைத்தேன்!!
பணம் இருந்தா போதுமா?
உன்னை பாத்துக்க வேணாமோ?
பாரு என்னமா இளைச்சிட்ட?
பரிதாப போர்வையில் பார்வையாலே
என்னை துகிலுரிக்கும் வக்கிர மனிதர்களை
தலைக்குனிந்தே கடந்து வந்தேன்!!!
உன் சுகம் நானறிய, வாட்ஸ் அப்,
அறியா வயதில் அறியாமல் பூத்தக் காதல்
நாணத்தின் அறிமுகம் கிடைத்த முதல் தருணம்,
பிஞ்சுக் குழந்தையின் பால் மனம் மாறா சிரிப்பை போல்
என் மனதில் பதிந்தது அவன் முகம்.
பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு மட்டுமல்ல,
ஆணின் பார்வைக்கும் ஈர்க்கும் சக்தி இருக்கத்தான் செய்கிறது!!
வாழ்வின் வடிவமே தெரியா வயதில்
இனி வாழ்வே அவனோடு எனத் தோன்றியது எதனால்?
வெறும் ஈர்ப்பு என்று மனம் சொல்ல
இல்லை இது காதல்தான் என தோழி சான்றளித்தாள்.
அறிவியல் படிக்க நேரம் கிடைக்கவில்லை,
நான் அறியாதவன் பற்றி யோசிக்கும்
நேரம் மட்டும் எப்படி கிடைத்தது?
முதல் பார்வைக்கு வெறுப்பு வந்தது,
இரண்டாம் பார்வைக்கு விருப்