விவசாயி
மண்ணை பொன்னாக்கும்!
வித்தகன் நீ!!!!
ஆனால் தண்ணீருக்காய்
யாசிக்கிறாய்!
காணி நிலம் பாரதியின் ஆசை!
நிலத்தை காப்பதே
இன்றளவில் உன் ஆசை!
உன் நிலத்தை தரிசாய் மாற்றிடத் துடிக்கும்
விற்பனையாளர்..... பசித்தால் !!
சுண்ணாம்பு பொங்கலுடன்
சிமெண்ட் குழம்பும், தொட்டுக்கொள்ள செங்கல் சட்னியும்
உண்ணட்டும்!!!
மண்ணின் தரம் காக்கும் நீ
தரங்கெட்ட தரகர்களின் பேராசைக்கு பலியாகவில்லை
என்பதால்தான்
நாங்கள் தரமான உணவை உண்கின்றோம்!
நீ மண்ணின் உன் கனவுகளை விதைத்து!
உழைப்பையே உரமாக்கி! எதிர்காலத்தை அறுவடை செய்கிறாய்!!!
நீ மண்ணை நேசிக்கும் விவசாயி!
கடவுள் பூமிக்கு அனுப்பிய விசுவாசி!!!!
உன் உணவு போராட்டத்தில்!
உன்னால் விளைவிக்கப்பட்ட உணவை உண்ட
நாங்களும் பங்குத்தாரர்கள்!!!
வாருங்கள் நாம் ஒன்றுப்படுவோம்!!!!
பசுமை நிலங்கள் அழியாமல் காப்போம்!!