விளை மகள் என்னும் நான்

விளை மகள் என்னும் நான் !!!

விளை மகள் என்னும் நான் !!! விலைமகள் ஆகிட்டேனே!!!
என் பச்சை உடை கலையது! - தீ பத்தி வைக்கிறான் பாவி மகன் !!!
விளை நிலத்தை விக்க கூடாது -விவசாய பூமியாம்!
தரிசாய் காமிக்க நரித்தனம் செய்யிறான் ...
கர்ப்பணி வயித்து சிசுவை களைச்சு - மலடாக்குவதா ?? உன் மானிட சட்டம் ???

!! உன் வயிறு எரியாமல் நான் காத்தேன் உன் பண ஆசையினால்
என் உடல் ஐயோ எரியுதே!!!
என்னை அழித்து வில்லா , மாளிகை , கட்டியதில் மிச்சமான
சிமெண்டும் , சுண்ணாம்பும் எடுத்து வச்சிகோ!
பசிச்சா சாப்பிடு ! இல்ல சாமதியாவு!!!!!

நான் உனக்கு சோறு போட்டேன் ! நீ என்னை ஏன் கூ று போட்டே???

முள்ளு புதர் இடையிலே...நேத்து முட்டையிட்ட சாம்பக்குருவி !
மூச்சையடிச்சி விழுந்திடிச்சே ???

எழுதியவர் : விஜயராணி (6-Apr-18, 5:14 pm)
பார்வை : 90

மேலே