மழையை இன்றே சேமித்து கொள்

மழையை இன்றே சேமித்து கொள்
இலவசம் இலவசமென்றால் வாயை பிளக்கிறாய்
நான் தரும் இலவசத்தை ஏனோ வாங்க மறுக்கிறாய்...
பூமியை பிளந்து நீர் எடுக்கிறாய்
பூமிக்கு மேல் விழும் மழைநீரை சேமிக்க மறுக்கிறாய்...
நன்னீரை கழிவுநீராய் மாற்றி
கழிவுநீரை நன்னீராய் ஏமாற்றி
பணம் பார்க்கும் உலகமடா...
ஒரு நாள் அடித்துக் கொள்வாய் நீ எனக்காக
அந்த நாள் வரமாட்டேன் நான் உனக்காக...
இருக்கும் போதே அனுபவித்து கொள்
என்று நினைக்காதே...
இருக்கும் போதே சேமித்து கொள்
என்று நினைத்து கொள்...
இருக்கும் போதும் அனுபவிக்கலாம்
இல்லாத போதும் அனுபவிக்கலாம்
- சேமித்தால்...
- த.சுரேஷ்.