பிரியாத உறவு
அழகான உறவே
அன்பான துணையே
நான் பாடும்
பாட்டு உனக்காகத்தானே !
கவியோடு நயம் போலவே
ஒன்றோடு ஒன்றாக
இணைகின்ற உறவாகுமே !
காலம் நேரம் மாறும்
மன எண்ணமும் மாறும்
ஆனாலும் அன்பு மாறாதது !
சந்தர்ப்பமும் நேரும்
சஞ்சலமும் நேரும்
பிரிவென்ற சொல்லை உரித்தாக்கவே !
உல்லாச உலகில்
உறவென்ற நிலத்தில்
விரிசல்கள் உண்டாகுமே !
இணையாமல் இருக்க
விரிசல்கள் பெருக்க
புடையான்கள் உலாவுமே !
நல்ல மணையமைக்க
நேசம் ஒரு கோடி !
பற்றும் உறவமைக்க
பாசம் பல கோடி !
எந்நாளும் ஒன்றாகவே !
முகம் தன்னை சுருக்கி
சொல் கடிந்து கொண்டால்
கோபம் என்று ஆகாதமா !
வார்த்தை கொண்டு ஏசி
மௌனம் காத்து இருந்தாலும்
உறவு என்றும் மாறாதமா !
கசப்பான சொற்கள்
கடுமையான நினைவு
எல்லாமே மறந்திடலாம் !
அழகான நினைவு
கரைந்தோடும் நொடிகள்
என்றேஇனி வாழ்ந்திடலாம் !
நல்ல மணையமைத்து
கவிதையென வாழ
ஒன்றிணைந்து கூடி
காவியங்கள் படைக்க
பிரியாத உறவாவோமே !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
