குழந்தை தொழிலாளியாகிய நான்
யார் நான் என்ற அடையாளமில்லாமல்
தொடர்கிறது எந்தன் பயணம் ...
கனவுகளை சுமக்கும் வயதினில்
கால் வயிற்று சோற்றுக்காக கற்களை சுமக்கிறேன் ...
தண்ணீர் வற்றிப்போன ஆறுகளைப் போல்
என் கண்களும் சிந்த கண்ணீர் இல்லாமல் வற்றி வறண்டு போயின ...
பட்டாசு வெடிச்சத்தங்களாகின என் அழுகுரல் !
மத்தாப்பு ஒளிச்சிதறல் என் மரிந்து போன புன்னகை !
தீப்பெட்டிக்குள் அடுக்கப்பட்டிருக்கும் தீக்குச்சிகள் போல்தான் என் சுதந்திரம் ...
பள்ளிகளை கடக்கும் போது ..
படிக்க ஆசை வரவில்லை எனக்கு !
என் அற்ப ஆசையெல்லாம் பள்ளிக்கூட பாலகனாய்
கள்ளமும் கவலையுமில்லா அந்த புன்னகையை என் உதடும் சிந்திவிட வேண்டுமென்பதே...
கற்பனை கோட்டையை நெஞ்சினில் சுமந்து கொண்டு ..,
கலைந்து சென்ற கனவுகளையும் ,
தொலைத்து போன என் எதிர்காலத்தையும் ..,
தேடி தேடி அலைகிறேன் ...
தேடியது கிடைக்கவில்லை என்று
கிடைத்ததை ஏற்கவும் முடியவில்லை !
நான் யாரென்ற அடையாள தேடலில்
என்னையே தொலைத்து, இறுதியில் சலித்தும் போன என்னை
என் தாய்நாட்டினை ஆளும் மாண்புமிகு தலைவர்கள் அடையாளம் கண்டனர் ...
ஆம் ... அவர்கள் கொடுத்த அந்த அங்கீகாரமே...
குழந்தை தொழிலாளியாகிய நான் ...
அ.ப.சந்தோஷ் குமார் ...