அழகிய காவலன்
ககோளத்து பாதையில்
ககேசனாய் ஒளிர்ந்தவனே !
கடாகம் உள்ளே
காட்சி தந்தவனே !
காடாந்தகாரம் நீக்கி
காடாக்கினி கொண்டு
காடவிளக்காய் ஒளிர்பவனே !
காலம் பெற நேரத்து
கவின் நீயே !
காலை நேரத்து
காவலன் நீயே !
காசினி மக்களுக்கு
காங்கையும் நீயே !
கதிர்ப்பின் காரணத்தால்
கன்னிகையும் விரிந்து
கண் விழிக்குமே !
கதிரவனின் சிறிய
கடாட்சம் எளிய
கவியையும் கவித்துவமிக்க
கவிவானனாய் ஆக்கிடுமே !