மூன்றாம் தலைமுறை
மூன்றாம் தலைமுறை
**************************
மூன்றாம் தலைமுறையை சேர்ந்த
ஒருத்தன் ஒரு கடிதம் எழுதுகிறான்...
பேனா பிடிச்சி எழுதி
ரொம்ப நாள் ஆனதினால்
அவனுக்கு கை கொஞ்சம் நடுங்குது....
எங்க தாத்தா,
ஊரவிட்டு தொலைவில் இருக்கும்
கருசக்காட்டுல விவசாயம் பண்ணி
எங்க அப்பாவ வளர்த்தார்...!
எங்க அப்பா
அந்த விவசாய நிலத்தை
விற்று என்னை படிக்க வைத்தார்...!!
இன்னைக்கு நா ஒரு பட்டதாரி...!!!
எங்க அப்பா என்கிட்ட
அடிக்கடி ஒன்னு சொல்லுவார்....
"நல்லா படிக்கனும்டா மகனே...
படிப்புதான் கடைசி வரைக்கும்
உன் கூட வரும்னு..."
அவர் சொன்னதுக்காகவே
நா நல்ல படிச்சேன்...
அப்புறம்
என்னோட கல்யாண பத்திரிக்கையில
என்னோட படிப்ப
என் பேருக்கு அப்புறம் பெருமையா போட்டார்...
இன்று நான் வெளியூரில்
வேலை செய்கிறேன்...
எங்கப்பா உள்ளூரில் இருக்கிறார்...
ஆனா
எனக்காக தன்னைவிற்று
பணம் கொடுத்த நிலம்
எங்கயும் போகாம அங்கயே இருக்குது...
"அதிஷ்ட லட்சுமி நகராக"
எதோ
இன்னும் பத்து வருசம் கழிச்சி அங்க
ஒரு காலேஜ் வருதாம்...!
ஒரு ரோடு வருதாம்...!!
ஒரு ஹாஸ்பிடல் வருதாம்...!!
ஆனா,
"விவசாயம் பண்ண
ஒருத்தரும் வரல...."
நா சாகுற வரைக்கும்
கூட வரும் படிப்புக்கு ஆசைப்பட்டு...!
நா செத்ததுக்கப்புறமும்...
அதே இடத்தில் அமைதியா இருக்கும்
என் நிலத்தை விட்டுட்டேனே...!!
இப்படிக்கு
மூன்றாம் தலைமுறை பட்டதாரி
இவண்
✒க.முரளி (spark MRL K)