இளைஞனின் குரல் - 1
தொகுதிப் பக்கம் வராமலே மக்களின் குறைதீர்க்கும் சட்டமன்ற உறுப்பினர்களெல்லாம் தீர்க்கதரிசிகளோ!?...
வியப்பாகவே உள்ளது தமிழகத்தின் கட்சி அரசியல் முறை...
மக்களாட்சி என்று கூறிவிட்டு, இதுவரை மக்களையே சந்திக்காத சட்டமன்ற உறுப்பினர்கள்...
என்னவொரு புத்திச்சாலித்தனம் பார்த்தீர்களா???...
சொகுசாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களா ஏழை, எளிய மக்களைப் பற்றிச் சந்திக்கப் போகிறார்கள்???...
தனது தேவைக்கு அதிகமான ஆடம்பரத்தில் வாழ்பவன் என்றுமே சிந்திப்பதில்லை சக உயிர்களின் நிலை குறித்து....
கஷ்டப்படுபவர்களே சிந்திக்கிறார்கள்...
பாதிக்கப்பட்டவர்களே சிந்திக்கிறார்கள்...
இன்று பணத்தையே எண்ணி வாழும் நாளைய பிணங்களே
நல் புத்தியை அறியுங்களே...
நல் மார்க்கத்தை அறியுங்களே....
தன்னை அறிந்து, தனது அத்தியாவசியத் தேவைகளை அறிந்து,
தன்னைப் போன்றே பிறருக்கும் தேவைகளுண்டு,
உணர்வுகளுண்டு என்பதை உணருங்களே.....
ஆங்கிலத்தில் மிக நன்றாக பேசினால் மட்டுமே வேலை தருவோமென்று கூறும் தமிழில் பேசத் தெரியாத நிறுவனங்களுக்குத் தமிழ்நாட்டில் அனுமதி வழங்குவதே தவறு...
நாங்கள் ஆங்கிலத்தில் பேசத் தயார்...
நீங்கள் அழகுத் தமிழில் பேசத் தயாரா???...
(தொடரும்....)