காதல் கல்யாணம்

சிலந்தி வலை!
வட்டதில் பாதி விட்டம்
விட்டதில் பாதி ஆரம்
படித்துகொண்டிருந்த மாணவன்
தலைக்கு மேல்...
எச்சில் ஆதாரமாய் சிலந்தி வலை!

**********

மழை!
வா வா என்றால் வராதது
போ போ என்றால் போகாதது!

**********

பாப்பா!
கொசு மட்டையில் நட்சத்திரங்களை
பொரித்து மகிழ்ந்தாள் பாப்பா!

**********

நிலக்கடலை!
படி இல்லா மாடி வீடு!

**********

ஜாலம்!
வானவில்லில் ஜாலம்
வண்ணங்கள்
கவிதையில் ஜாலம்
வார்த்தைகள்
என் இதையத்தில் ஜாலம்
அவள் பார்வைகள்!

**********

எங்க பாப்பா!
மச்சுவீட்டுக்குள்ளே
குதிருக்கு பின்னாலே
எங்க வீட்டு நிலா
ஒழிந்து கொண்டிருக்கிறது
பௌர்ணமி வெளுச்ச்சத்தோடு!

**********

காதல் கல்யாணம்!
என் விழிகள் ராக்கெட்
உன் இதையம் சேட்டிலைட்
நமக்குள் காதல்வாசம்!
சிறிய டெஸ்ட்
காண்பிப்போம் ரிசல்ட்!
காதல் கல்யாணம்!

எழுதியவர் : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (19-Feb-17, 11:04 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 315

மேலே