En Swaasakkaatre..

எங்கே நீ எங்கே
என் சுவாசக் காற்றே!!
நீ இல்லை என்றால்
என் உயிர் விட்டு போகும்!!

கண்ணே என் கண்ணே
என் கண்கள் முன்னே!!
நீ வந்து நின்றால்
என் மனம் குளிர்ந்தாடும்!!

நான் எங்கே போவேன்
நீ இல்லை என்றால்!!
மனம் நொந்து சாவேன்
எனை தாண்டிச சென்றால்!!

நான் என்ன செய்தேன்
நீ என்னை வெறுத்தாய்!!
மண்டியிட்டு கேட்டேன்
எனை விட்டு போனாய்!!

நான் அழுதேன் நீ வெறுத்தாய்
உயிர் அறுத்தேன் நீ கொதிதாய்!!

நான் சிரித்தேன் நீ கடிதாய்
கன்னங்களில் முத்தம் கொடுத்தாய்!!

நீ இன்றி வாழ என்னால் ஆகாது
நீ இன்றி செத்தால் என்னுடல் வேகாது!!

நான் உன்னை பார்க்க கண்கள் கொண்டேன்
உன்னுடன் வாழ உயிரும் கொண்டேன்!!

வா வா என்னை அள்ளிக்கொண்டு போ போ!!

எழுதியவர் : Divya Narayanan (17-Jul-10, 3:12 pm)
சேர்த்தது : Divya
பார்வை : 505

மேலே