எனக்கென ஒரு காதலி
ஏன் இந்த உலகில் எனக்கென ஒருத்தில்லை
மெய்யான அன்பில் என்றுமில்லை பிழை
அவளுக்கென காத்திருக்கும் நெஞ்சில் சிறு மழை
வர்ணம் தீட்டிய ஓவியத்தின் அழகை கண்கள் உணரவில்லை
இப்படியே வாழ்த்திட மனம் விரும்பவில்லை
கண்கள் குளிர
நெஞ்சம் நெகிழ
மகரந்தம் பரவ
அவளின் பார்வை தேவை ?
மென்மை புகுந்த மல்லிகை அவள்
வெண்பனியை வசமாக்கிய காந்தம் அவள்
பசுமை படர்ந்த முகில் அவள்
வெண்புரவியில் வந்த தேவதை அவள்
நட்சத்திரங்களும் அவளை கண்டு அதிசியக்கும்
கங்கையும் அவளின் மேனி பட காத்திருக்கும்
மயிலும் அவள் நடனத்தில் வாய் பிளக்கும்
அவள் பாடும் சந்தத்தில் குயிலும் மனம் உறையும்
கள்ளம் இல்லா மனதில்
கருவிழியின் வரவாள்
காதல் துலிர்விட
நீரோடையின் அமைதியை கொண்ட இதயம்
அருவியாய் துள்ளி குதித்தது
அவளுக்காக இன்னோரு முறை
பிறக்க நினைத்தது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
