தாய்மொழி தினம்

தாய்மொழி தினம்

*புத்தாடை உடுத்தினேன்
புன்னகையை இழைத்திட்டேன்

*உறுத்தலான உறுத்தலாய்
ஊறுகின்ற தையலாய்

*வியர்வையோடு வெறுமையாய்
மெல்ல நகர்ந்திடும்
மணித்துளிகளாய்

* பொறுமையுடனே அமைதியாய்
விருந்தினர் நகரும் தருணமாய்

*துள்ளி குதித்து ஓடினேன்
தூய ஆடை உடுத்தினேன்

*மன நிறைவு கொண்டேனே
மகிழ்வுடனே நின்றேனே

* கையில் ஒரு புத்தகமாய்
கண் அயர்ந்தும் போனேனே

*அலுவலகம் சென்றேனே
அன்னிய மொழி தினித்தானே

*பன்முகரும் பழகிட
பதைபதைத்து நின்றேனே

*பணத்திற்காக உழைத்தேனே
பாவனையாய் நடித்தேனே

*வியர்வையோடு வெறுமையாய்
மெல்ல நகர்ந்திடும்
மணித்துளிகளாய்

*பொறுமையுடனே அமைதியாய்
பணிகள் முடியும் தருணமாய்

*துள்ளி குதித்து ஓடினேன்
துன்பம் எல்லாம் நீக்கினேன்

*மன நிறைவு கொண்டேனே
மகிழ்வுடனே சென்றேனே

*கையில் ஒரு புத்தகமாய்
கண் அயர்ந்தும் போனேன் -நான்

நான் நானாய் வாழும் தருணம்

என் தாய்மொழியை பருகும் தருணம்

சிவ.ஜெயஸ்ரீ

எழுதியவர் : சிவ.ஜெயஸ்ரீ (21-Feb-17, 10:52 pm)
Tanglish : thaaimozhi thinam
பார்வை : 69

மேலே