என் உலகம்
உன் கருங்கூந்தல்- கார்மேகம் என்றானதோ...
உன் கண்ணீர் துளிகள்- மழை என்றானதோ...
உன் கண் சிமிட்டல்- மின்னல் என்றானதோ...
உன் புன்னகை- மலர் என்றானதோ...
உன் நடைபாதை- வானவில் என்றானதோ...
உன் மூச்சுக் காற்று- தென்றல் என்றானதோ...
உன் பேச்சு- இசை என்றானதோ...
உன் பெயர்- கவிதை என்றானதோ...
உன் உருவம்- சிலை என்றானதோ...
உன் அழகு- ஓவியம் என்றானதோ...
உன் காலை முகம்- சூரியன் என்றானதோ...
உன் மாலை முகம்- நிலவு என்றானதோ...
உன் இதயம்- உலகம் என்றானதோ...
அந்த உலகம்- இன்று என் வசமானதோ...!