பத்தாண்டு காலம்

பத்துப் பொருத்தம் பார்த்து
பத்திரிக்கையில் பெயர் சேர்த்து
பத்தாயிரம் அறியா முகங்களை
பத்தே நாட்களில் பந்தங்களாக்கி
இருமனங்களும் ஒரு மனமாக இனைந்து
இல்லற வாழ்வை இறைவனின் அருளோடு விதைத்து
அவளின் விருப்பத்தையும் மதித்து
அவனின் குழப்பத்தையும் சிதைத்து
தடை போட்ட துன்பத்திலும் துணிந்து
இடை சேர்ந்த இன்பத்திலும் நனைந்து
மகிழ்ந்துறவாடிய பொழுதுகளோடும்
எதிர்காலத்தின் கனவுகளோடும்
எதிர்பார்க்காத திருப்பத்தோடும்
நிறைந்த பத்தாண்டின் நினைவுகளோடு
பதினோராம் ஆண்டின் கதவுகளைத் திறப்போம் !!!

எழுதியவர் : சு.அரவிந்த் (24-Feb-17, 9:09 am)
சேர்த்தது : AravindS11
பார்வை : 52

மேலே