ஒற்றைக்குரல் - குறுங்கவிதை

ஒலிக்கின்ற ஒற்றைக்குரல்
ஒற்றுமையின் கீதமன்றோ !
பலித்திடுமே நன்னெறிகள்
பண்பானக் குரல்வழியே !


தனித்தும்தான் குரல்கொடுத்தால்
தரணியிலே சாதித்தாலும்
இனிவருமா மானிடரே !
இன்பந்தான் தந்திடுமா !


ஓங்கியுமே முறையிட்டால்
ஒர்ந்திடுமே வாழ்வுமுறை !
தாங்குகின்ற வகைதனிலே
தப்பாது அடைந்திடலாம் !


ஒற்றைக்குரல் ஒன்றுசேரா.
ஓலங்கள் சேர்ந்துவிடும் .
கற்றைகுரல் கொடுப்பாயே !
காசினியும் கேட்பதற்கே !!!


ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Feb-17, 9:52 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 126

மேலே