அருவுருக்கு திருவுரு
இரையிலும் இன்பதிலுமே
இறைதேட பலரிருக்க
பிறையிலும் பேழையிலும்
மறைபொருளைப் புதைப்பதேனோ..?
அருவுரு இறைவனுக்கேனோ
திருவுரு சிலையிங்கே..!
கருவூலம் திறக்கிறான் பலர்
துறந்தவன் என பெயர் தாங்கி..!
தருவழித்தும் கருவழித்துமே
தெருவெல்லாம் கருவறைகள்..!
குருவெல்லாம் கோமானாய்..!
குடியோனிங்கே கோமாளியாய்..!
அம்மையப்பன் நம்புவோரே..,
அம்மையும் அப்பனும்
அடுத்தவர்க்குமுண்டு அறியீரோ..?
மறைபொருள் தேடுங்கள் - தவறில்லை
மதங்களிலல்ல மனங்களில்..!
வனங்களிலல்ல வாழ்க்கையில்..!