ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு
காளையை அடக்கிவிட்டு!
பொண்ணக்கட்டு பொண்ணக்கட்டு
உன் வீரம் காட்டு!

இளைச்ச மனுசன் கூட
இங்கு உண்டு உண்டு
அவன் வளர்த்த மாடு
இங்கு இளைச்சதுண்டா உண்டா

இது உழைச்சு வாழும் கூட்டம்
நாங்க களைச்சுப் போவதில்லை
காளையை துன்பப்படுத்தமாட்டோம்
ஏனா தலைச்ச புள்ள!
எங்க தலைச்ச புள்ள!

துள்ளி ஓடும் காளை
உன்னைத் தூக்கிவீசும் வேளை
காதலி கண்பார்வைப் பட்டா!
நீ பறப்பாயே சிட்டா!
காளையை அடக்காம விட்டா!
உசுரு உன்கிட்டில்ல கிட்டா!

இது வீரம் விளைஞ்ச மண்ணு!
காத்திருக்கும் மாமன் பொண்ணு!
காளையடக்கு கண்ணு!
அடக்கி கல்யாணம் பண்ணு!
அவளக் கல்யாணம் பண்ணு!

மக்கள் சுத்திநின்று கைதட்டி!
மாடு வந்து மேலமுட்டி!
உன் இரத்தம் கீழகொட்டி!
தோற்றாலும் நீ வீரன்!
உன் உசுருக்கு அஞ்சா
பெருஞ்சூரன்!

தடைகள் ஏதுமில்லை எங்களைத்
தடுக்க யாருமில்லை!
இது எங்களோட எல்லை நீங்க
கொடுக்காதிங்க தொல்லை!

இது அடங்கா கூட்டம்!
எதிரியை அடக்கும் கூட்டம்!
இங்க
செல்லாது உங்க சட்டம்
ஜெயிக்காது உங்க திட்டம்
ஏனா மாணவர்க் கூட்டம்
இது மாணவர்க் கூட்டம்

எழுதியவர் : வே.அருண்பிரசாத் (25-Feb-17, 11:31 am)
Tanglish : jallikkattu
பார்வை : 60

மேலே