சிங்கம்
வண்டலூர்ச் சிங்கமே உனையிங்கு
கூண்டிலடைத்தது யார்தெரியுமா?..
குள்ளநரிக் கூட்டமொன்று தானேனநீ
அறிந்தால் உன்ரத்தம் கொதிக்காதா?..
சிங்கமுனைக் கூண்டிலடைத்தாலுமுன்
சீற்றம் கண்டு சீறும்பாம்பும் ஓடு மானால்
காட்டுக்குள் ராஜாவாக இருந்தநீ இப்போது
கூண்டுக்குள் அடைபட்டு கூஜாவாகி விட்டாய்
காட்டுக்குள் திரும்பச்செல்ல நினைத்தால்
கள்ளவழி இங்கில்லை என அறிவாய்
இறைச்சிதர இடமில்லையிங்கே...விதிப்படி
இலைதழைதான் தரமுடியுமென அறிவாய்.
தனியே தவிப்பது நீயென்றறிந்தால்
குள்ளநரிகள் கூட்டமாய்வரு முனைப்பார்க்க
கொதிதெழாவிட்டால் இனியுனக்கு
கூண்டுதான் கதியென்றாகிவிடும்..
கர்ஜித்து இனியொன்றும் பயனில்லை
கனிவாய் பழகக் கற்றுக்கொள்! இனியேனும்
தன்மானம் காக்கயுன் ராஜநிலைமறந்து
தக்கவழி தேடுதிருட்டுத்தனமாய்த் தப்பிப்பதற்கு
காவலனொருநாள் பூட்டமறப்பா னொருநாளன்று
கள்ளத்தனமாய் காட்டைநோக்கி ஓடிவிடு.