காதல் காத்திரு பகுதி 5

அஞ்சலி கட்டிவைக்கப்பட்ட இடம்

அஞ்சலியின் கண்கள் நீரை இறைக்க... தலையிலிருந்து ரத்தம் வழிய... வேதனையுடன் ஃப்ளாஸ்பேக்......

ஒரு ஆண்டுக்கு முன்.....

பிப்ரவரி 8..... 2016....

இடம் எழும்பூர் ரயில் நிலையம்

அலைபேசி ஒலிக்கிறது..... ஒருவன் தொடர்பை இணைத்து பேச ஆரம்பிக்கிறான் ..

~ ஒருவன்: மச்சா... எங்கடா இருக்க.. ரயில் வந்து எவ்ளோ நேரம் ஆகுது..இன்னும் ஏன் கால் கூட பண்ணாம.. எங்க சுத்திட்டு இருக்க...

கதிர்: டேய்.. மச்சி.. நா உன் வீட்டுக்கு வந்துட்டேன்.. நீ கிளம்பி வா..

கதிரின் நண்பன் விஜய்: டேய் வெளக்கெண்ண... உன்ன பிக்கப் பண்ணநா இங்க வெயிட்டிங்க்ல நிக்குறேன்...

கதிர்: கூல் பேபி.... இதோ வன்ட்டேன்....

விஜய்: டேய் டேய்... பக்கத்துலேயே நின்னுட்டு என்ன வேலடா பாக்குற.. டேய் ... பைக்ல போகலாம்டா... டேய்..டேய்..

அவனை அப்படியே பேசவிட்டு, வேகமாக ஓடுகிறான் கதிர்.

ரயில்வே அறிவிப்பு:

சென்னை கடற்கரை வரை செல்லும் 12 கார் வண்டி

நடைமேடை எண் இரண்டில் இருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்படவுள்ளது....

திடீரென்று பிளாட்பாரத்தில் ஓடி வந்த ஒரு பெண் வண்டியை பிடிக்கமுடியாமல் தவிக்க, வேகமாக வந்த கதிர் அந்த பெண்ணை இடித்து விடுகிறான்...

அதனால் அந்த பெண் வண்டியை தவறவிட்டதுடன் கீழே விழுந்துவிடுகிறாள்... அவள் கொண்டு வந்த புத்தகங்கள் சிதறி விழ, மன்னிப்பு கேட்டுக்கொண்டு வெளியே வருகிறான் கதிர்.

எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வெளியே வர ஆட்டோ பிடிக்க போக, வழியில் ஸ்கூட்டியில் வந்தாள் அஞ்சலி....

கதிர்: சிஸ்டர் சிஸ்டர். ப்ளீஸ் கொஞ்சம் லிப்ட்..ப்ளீஸ்

அஞ்சலி: யோ யோ... எனக்கு அவசரமா போனும்யா.. கடுப்பேத்தாத..

கதிர்: அய்யோ எனக்கு அதவிட அவசரம்... போங்க போங்க.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்....

அஞ்சலி: கருமம் ... இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேனோ தெரில


கதிர்: நோ அஃபன்ஸ் சிஸ்... போங்க போங்க...

அஞ்சலி ( வண்டியை செலுத்திக்கொண்டே.): எங்க போணும்....

கதிர்: அப்டியே தாம்பரம்... வர போகணும்..

அஞ்சலி:( வண்டியை நிறுத்திக்கொண்டு) : யோ.. யாருய்யா நீ.. சும்மா வந்து கடுப்பேத்திக்கிட்டு...

கதிர்: சகோதரி.. ஒரு ஆபத்துல இருக்கேன் அதான்.. தப்பா எடுத்துக்காதீங்க.. மன்னிச்சிடுங்க...

அஞ்சலி வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.. கோபத்துடன்...

தங்கமே...உன்னத்தான் தேடிவந்தேன்தானே.....ஏ ஏ ஏ ஏ...

மொபைல் அடிக்கிறது..

விஜய்: டேய் ** வெண்ண எங்கடா இருக்க...

கதிர்: கூல் பேபி... ஒரு பொண்ணுகூட

விஜய்: (குறுக்கிட்டு)... டேய் வந்த ஒடனே ஆரம்பிச்சிட்டயாடா..

கதிர்: இல்லை அங்கிள்.. இனிதான் ஆட்டமே.....

காதல்...காத்திரு.....

பகுதி 5

எழுதியவர் : உதயகுமார் (25-Feb-17, 2:43 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 236

மேலே