மீத்தேன் நச்சு பாய்வதோ

வான்தமிழ்த்தேன் காவிரி பாயும் படுகையில்
மீத்தேன்நச் சோபாய் வது ?

சமையல் எரிவாயு தன்னை எடுத்திட
நெல்வய லோஇங் கிரை ?

நஞ்சுண் வதோநமது தஞ்சையின் நன்னிலம்
நெஞ்சு துடிக்குத டா !

மீத்தேன்தன் வேதியல் தீவிளைவில் தீந்தமிழ்
தேன்தஞ்சை சாய்ந்திடலா மோ ?

ஓரணுகார் பான்நா லணுஹைட் ரஜன்கூட்டு
வேதியல் நச்சுமீத் தேன் ! CH4

உயிர்காற் றினைஉறிஞ் சிக்குடிக்க வல்ல
கரிமல வாயுவின் தேன் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Feb-17, 9:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 88

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே