ஈனப்பிறவியாய் இருந்திடுதல் கூடாதே மானிடரே
ஈடில்லா அன்னையாம் இச்சகத்தின் தெரசாவே
ஈட்டினீர்கள் கருணையினால் முத்திரையை எந்நாளும்
ஈகைகுணம் கொண்டவரே இவ்வுலகின் தெய்வம்தான்
ஈர்ப்புடனே புவிதனையும் பேணுகின்ற தாயன்றோ !
ஈசனுமே தந்திட்ட வரம்தானோ நீங்களுமே
ஈங்கின்றே வாழ்த்துதற்கு வயதின்றி வணங்குகின்றேன்.
ஈதலின்றி வாழ்ந்திடுமா உயிர்களுமே காசினியில்
ஈனமென இருந்திடுதல் கூடாதே மானிடரே !!!
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்