கண்கள் வடிக்கும் கண்ணீர்துளி நீ உணர்வாயா 555

உயிரே...
என் இமை சிப்பியில் இருந்து
வரும் கண்ணீர் துளி...
உனக்கு எடுத்து சொல்லுமடி
என் இதயத்தின் வலிகளை...
உடைந்துபோன பிரபஞ்சத்தில்
தத்தளிக்கும் ஜீவனைப்போல்...
என் இதயம் தத்தளிக்குதடி
மண்ணில்...
மலர்ந்திருக்கும் பூக்களும்
மாலையில் வாடிவிடும்...
துடிக்கின்ற என் இதயத்தை
நீ தவிக்கவிடாதடி...
நீ ஒருபார்வை பார்த்தாலே
என் இதயம் உருகிவிடுமடி...
கண்கள் வடிக்கும்
கண்ணீரையும்...
இதயத்தின் துடிப்பபையும்
நீ உணர்ந்தாலே...
என் ஜீவன் வாழுமடி
மண்ணில்.....