தோற்றுப் போ

தோற்றுப் போ

நம்மிடையே நடக்கும்
அனைத்துப் போட்டிகளிலும்
நானே தோற்றுப் போகிறேன்

நாம் நடத்தும்
அனைத்து விவாதங்களிலும்
தோல்வியை ஒப்புக்கொண்டு
நானே முதலில் விலகி செல்கிறேன்

நம்மிருவருக்கும் இடையேயான
அகங்காரப் போர்களில்
எப்பொழுதும் நானே
மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு
தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்

நம்மிடையே தோன்றும்
ஒருவர்மீதான ஒருவரின்
கருத்து மோதல்கள்
அனைத்திலும் நானே தோல்வியை தழுவுகிறேன்

பொது இடங்களில்
பிறருக்கு தெரியாமல் நடக்கும்
பார்வை போர்களிலும்
நான்தான் இமைகள் தாழ்த்தி
தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்

நம்மிடையே உருவாகும்
உறவுகளுக்கான உக்கிரமான சண்டைகளில்
ஒவ்வொரு முறையும்
நானே ஒதுங்கி நின்று
என் தோல்வியை
உறுதி செய்து கொள்கிறேன்

எனக்கு தெரியும்
எல்லாவற்றிலும்
உன்னிடம் தோற்றுப்போய்
உன்னையும் உன்அன்பையும்
என்னிடம் தக்கவைத்துக் கொள்வதே
எனது உண்மையான வெற்றியென்று

எழுதியவர் : சூரியகாந்தி (1-Mar-17, 8:14 am)
Tanglish : thotrup po
பார்வை : 121

மேலே