என் காதலை சொல்லிய தருணம்
உலரவைத்துக்கொண்டிருந்தாள்
துணிகளை அவள்
உளறிவிடகூடாது என்ற
துனிவுடன் நான்
நான் வருவதை உணர்ந்தும்
உணராததுபோல் இருந்தால்
என் வீட்டு மாடியில்
ஒரு முனையில் நான்
மறு முனையில் அவள்
மாரத்தான் ஓடியதுபோலிருந்தது
மாடியின் துரம்கடந்தது!
உயிர் கையில்பிடித்து
பெயர் சொல்லிஅழைத்தேன்
அவளுக்கே உரித்தான
புண்ணகையுடன்
என்னவென்றாள்
கையில் இருந்த
காகிதம் நீட்டினேன்
படித்தாள்...
எதிர்பார்த்திருந்தும்
எதிர்பாராததுபோல்
என்னவென்று கேட்டாள்!
உன்ன எனக்கு பிடிச்சிருக்கு
என்றேன்
கண்தொடர்பு கம்பி
பட்டென அறுந்தது
அதுவரை பார்த்திராத ஒன்று
அவளது முகத்தில்
வேகமாக உணர்ந்துகொண்டேன்
வெட்கம் தான் அது
சத்தியமாய் சொல்கிறேன்
செத்தேபோனேன் அந்தநொடி
அப்பொழுதே புரிந்துகொண்டேன்
அவளது பதிலை
அவள் கண்கள் என்னை
வரவழைக்க
உதடுகள் மட்டும்
தடைவிதிக்க
மவுனம் தொடர்ந்தது ...
பிறகு சொல்கிறாயா என்றேன்
சரியென தலையசைத்தாள்
நகர்ந்துசென்றேன்
நம்பிக்கையுடன்
ஒருநாள் கழிந்தது
என்
திருநாள் தொடங்கியது .....