டாக்டர்அம்பேத்கார்
வகுப்பறையினுள் சேர்க்காததால்
வரலாற்றில் இடம் பிடித்தாய்
பாராளுமன்றம் உன் பள்ளிக்கூடம்
நீ தந்த அரசியல் சட்டம்
எங்கள் அஸ்திவாரம்
பாரெங்கும் உன் புகழ் பாடியது
நாடெங்கும் அடிமைத்தனம் ஓடியது
பாரதமே உன்னை பார்த்து அஞ்சியதே
ஆண் பெண் என்ற ஜாதி மட்டும் மிஞ்சியதே
கொட்ட கொட்ட குனிந்தும்
திட்ட திட்ட பணிந்தும் நின்ற காலம் அப்போது
கொட்ட கொட்ட நிமிர்த்தும்
திட்ட திட்ட துணிந்தும் நிற்கும் காலம் இப்போது
கொடுமையை கண்டு கோபம் கொல்வதா
வறுமையை கண்டு வாடி நிற்பதா
கோபம் கொண்டது ஒரு மனம்
கொதித்தெழுந்து பாமரர் இனம்
ஒடுக்கப்பட்டது அன்றே அடிமைத்தனம்
உன்னால் இயற்றப்பட்டது எங்கள் அரசியல் சாசனம்