திங்களில் மஞ்சள்
வானம் எங்கும் மஞ்சள் மேகம்
மஞ்சள் தூவும் கொஞ்சல் மேகம்
பூமிக்கு வந்து பெண்ணாய் மாறும்
பெண்ணாய் மாறி வண்ணம் பூசும்
மஞ்சள் அப்பிய வண்ண விண்மீன்
அதில் தப்பிய இரு கண்மீன்
கை கால் முளைத்த ஓலை சுவடி
ரசாயன மாற்றம் செய்யும் ஆலை இவடி
வானவில்லின் மத்தி நிறம்
விழி வில்லை பத்தி கூறும்
அள்ளி செல்லும் காலை மேகம்
எனை தொற்றி கொள்ளும் மாலை மோகம்
திங்களில் பூண்ட மஞ்சள்
அந்த திங்களையும் மயக்கும் ஏஞ்சல்