நீ எனக்கு புதுமையே

மலர் இதழின் மென்மையும்
மயில் இறகின் மென்மையும்
மலர் பெண்மை உன்னில் உணர்வது புதுமையே எனக்கு ...

உன் விரலோடு விரல்கோர்த்த வினாடியில்
வீணையின் நாதம் உணர்வது புதுமையே எனக்கு

எண்ணத்தின் எழுத்துக்கள் யாவும் கவிதையாவும்
இதயத்தின் நினைவுகள் யாவும் காதலாகவும் உணர்வது புதுமையே எனக்கு

உன் பார்வையில் அகமகிழ்வதும்-நீ
போனபின் விழி நனைவதும் புதுமையே எனக்கு

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (3-Mar-17, 8:02 pm)
பார்வை : 79

மேலே