என் இதயத்தின் தோழன்

எனது எதிர்காலத்திற்காக
உனது நிகழ்காலத்தை
எனக்காக செலவிட்டாய்

நான் துண்பத்தில்
துவண்டபோது ஆறுதலாய்
எனது சுமைகளையும்
சுகமாய் கொண்டு சென்றாய்
என் தோல்வியிலும் வெற்றியிலும்
என்னோடு நீ தான் இருந்தாய் நண்பா
எனக்கு கை கொடுத்தா நண்பன் அல்ல
மேடோ பள்ளமோ
நடந்து பார் தெரியும் என்று
சொல்லி கொடுத்தாய்
நீ தான் நண்பா
வெயிலும் மழையிலும்
இரண்டு பேரும்
நனைந்து திரிந்து
நினைவுக்கு வந்தது

உன் நட்பை விட
மேலான
ஒரு உறவை
இந்த உலகில் காண முடியாது

உலகமே
என்னை வெறுத்த போதும்
ஒரு போதும் கலங்காதே நண்பா
என்ற உன் வார்த்தையில்
என் உலகமாகவே
உன்னை பார்த்தேன் நண்பா

இப்படி ஒரு நண்பன் கிடைப்பது
நான் கொடுத்தவரம்

நீ தான் என்
நண்பன் என்று சொல்லா
ஒருவன் நீ தான்

வினோஜா

எழுதியவர் : வினோஜா (4-Mar-17, 7:44 am)
பார்வை : 124

மேலே