ஏனென்றால்

உன் தந்தையின்
ஒரு துளி விந்தணு
வீரியமற்றே இருந்திருந்தால்
நீயும் பிறப்பை
இழந்திருப்பாய்
என்னுடன்
மோதலை
தவிர்த்திருப்பாய்

ஆளை வெட்ட
உனக்கு போதும்
அரிவாள் மட்டுமே

உன்னையும்
திருத்த சாத்தியம்
என் அறிவால்
மட்டுமே

இரத்தத்தில் கலந்தது
உன் சாதிவெறியென்றால்
உன்னை ஒழித்தே
தீருவேன் நடப்பது
நன்மையென்றால்

பிறன்மனையாள் கண்டு
உனக்கு ஆணுறுப்பு
புடைக்குமென்றால்
எனைகண்டு உன்
மகளுக்கு காதல்
வருவதில் தவறில்லை

அடுத்தவனை அடித்துப்
பிழைக்க
நீ வரம்புமீறினால்
உன் மகளை அணைத்து நான்
குறும்புசெய்வதில்
தவறில்லை

பண போதையில்
நீ செய்வதெல்லாம்
அநியாயமென்றால்
மனபோதையில்
உன் மகள் என்னுள்
கலந்திருப்பது தவறில்லை

அரசியலெனும்
குட்டையில்
நீ சாக்கடையாய்
சேரும்போது
காதலெனும்
பெருங்கடலில்
உன் மகள்
நதியாய் இணைவதில்
தவறில்லை

தீண்டாமைத்தீயை நீ
என்மீது
கொளுத்தும்போது
ஆண்மைத்தீபத்தை உன்
மகளுக்குள் நான்
ஏற்றுவதில்
தவறில்லை

ஆடம்பர
விபச்சார விடுதிக்குள்
உல்லாசங்காண
நீ வாரங்களை
கழிக்கும்போது
காதலர்கள் உலாவும்
அழகான பூங்காவினுள்
உன் மகள் என்னுடன்
சில மணிநேரம்
கழிப்பதில் தவறில்லை

பணம் கொடுப்பாராயின்
மண்டியிட்டு நீ
மலம் உண்ணும்போது
மனம் திறக்கும்போது
உன் மகள் கூந்தலில்
நான் மல்லிகை
சூடுவதில் தவறில்லை

மக்களின் வயிற்றிலடித்து
நீ அடுக்குமாடிகளை
ஆங்காங்கே
கட்டும்போது
உன்மகளைக்
கட்டிப்பிடித்து
என் உயிரணுவால்
அவள் வயிறு
நிரம்புவதில்
தவறில்லை

உன் காமத்திற்கு
நீ
அப்பாவிப்பெண்களை
இரையாக்கும்போது
என் காதலுக்கு
உன் மகள்
நிறையாய் இருப்பதில்
தவறில்லை

ஆண்டுதோறும்
நீ
அவலங்களை
அரங்கேற்றும்போது
என் ஆயுள்தாங்க
உன் மகள்
ஆயத்தமாவதில்
தவறில்லை

ஒருபோதும்
நினைத்துப்பார்க்க
முயலாதே
என்னையும்
உன் மகளையும்
சாதி வித்தியாசம்
பார்த்து
பிரிக்கலாமென்று...
அவள் உனக்குப்
பிறந்த உத்தமி...
நீ அவளைப்பெற்ற
அயோக்கியன்...

நீ ஆட்களைத்
திரட்டினால்
வன்முறை..
நான் ஆட்களைத்
திரட்டினால்
புரட்சி...

ஏனென்றால் நீ
சாதிக்குள் வாழும்
கிணற்றுத்தவளை
நானோ சகிப்புடன்
வாழும் கடல்மீன்...

எழுதியவர் : கார்த்திகைசெல்வன் (4-Mar-17, 8:54 pm)
Tanglish : yeenendraal
பார்வை : 110

மேலே