நீ இல்லாத நான்
விழிகளை மட்டும்
விதைத்து விட்டு போனவளே......
விதையாய் வளர்ந்திருக்கும்
உன் நினைவுகளின்
வாசம் நித்தம் என்னை
கொள்ளுதடி........
இரவு நேர கனவிலே
உன்னோடு உரையாட
உறங்கினாலும் விழிகளுக்குள்
உறக்கம் இல்லையடி........
என்னோடு நீ இல்லாத
நாட்களும் என்னை
ஏளனம் செய்யுதடி........
உன்னோடு என் வழிப்பயணம்
என்னோடு
உன் தோள்சாய ஏங்குதடி.......

